பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆& ஆராய்ச்சிக் கட்டுரைகள்

அன்றி, சுமை ஒரு போதும் இராது: பயன் உண்டே அன்றிப் பளு எப்போதும் இராது."

கடவுள் உணர்வு:

பொன்னனைய கலையுணர்வு பொருந்திய பேராசிரி யர் அவர்கள் மணி வாழ்வில் வைர ஒளி வீசுவது அவர்களுடைய கடவுள் உணர்வே. இளமை தொட்டே இறையுணர்வு நிறைந்த வாழ்க்கையை நடத்திய பெருமை பேராசிரியர் அவர்கட்டு உண்டு. சிவ வழி பாட்டில் சிறந்து விளங்கிய தந்தையார்க்குத் தவமைந்த ராய்ப் பிறந்த அவர், இளமை தொட்டே இறையுணர் வோடு வாழ்க்கையை நடத்துவதில் மன நிறைவு கண்டுள்ளனர். பேராசிரியர் அவர்கள் எழுத்திலும் பேச் சிலும் ஊறிக்கிடக்கும் இவ்வுணர்வு, அவர்கள் விடும் ஒவ்வொரு மூச்சிலும் கலந்து இழைகிறது எனல் மிகை யாகாது. சிறந்த சைவ சமயப் பற்றுடைய அவர்கள் சமரச நோக்குப் படைத்தவர்களாய்த் தொடக்க நாள் தொட்டு விளங்கியமையாலேயே, அவர்கள் கிறிஸ்தவ சமய அறிஞர்களைப்பற்றி எழுதிய நூல்களைப் படிக்கும் போதெல்லாம், இதை எழுதியவரினும் சிறந்தகிறிஸ்தவர் இருத்தல் இயலுமோ?’ என்று எண்ணுமாறு அமைந் துள்ளது. இந்த வகையில் வள்ளுவரும் இளங்கோவும் இந் நாட்டுச் சமயங்கள்பால் காட்டிய சமரசப் 'போக்கினைப் பேராசிரியர் அவர்கள் வெளிநாட்டுச் சமயங்கள்பாலும் காட்டியுள்ள பெருந்தகைமை போற்றி மகிழ்ந்து பின்

93. () திரு. வல்லை. பாலசுப்பிரமணியம் அவர்கள் "நித்திலக் குவியல் திங்கள் இதழில் பேராசிரியர் அவர்களைப் பற்றி வரைந்துள்ள கட்டுரைகளைக் காண்க.

(ii) கடிதக் கலையிலும் கைவந்தவர் என்னும் உண்மைக் குச் சான்ருய் இணைப்பு + காண்க,