பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள் ......... 2{శ్రీ

பற்றுதற்கு உரியது. இவ்வுண்மையை ஆழ உணர்ந்து கிறிஸ்தவ சமயப் பேரறிஞர்களே போற்றியிருத்தல் ஈண்டு நினைவுகூரத் தக்கது.

உண்மையான சமயஉணர்வு வாழ்க்கையில் பொலிவு பெற வேண்டும்; வெற்று வாய்ச்சொல்லில் இருந்தால் பயனில்லை. அடக்கம் ஒழுக்கம் அருள் ஆகிய மூன்று சிறந்த பண்புகள் வாயிலாகப் பேராசிரியர் அவர்களு டைய ஆழ்ந்த இறை உணர்வு என்றென்றும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றது.

தமிழ்மறை கண்ட திருவள்ளுவர், மாந்தர்க்கு உறுதி பயப்பனவாய் அவர்கள் பின்பற்றி ஒழுகுதற்குரியனவாய் வகுத்துள்ள எத்தனையோ அதிகாரங்கட்கு எடுத்தக் காட்டாய் விளங்கும் வாழ்க்கை வாழும் பேராசிரியர் அவர்கள். அடக்கமே உருவமாக அமைந்திருப்பதில் வியப் பொன்றும் இல்லை. ஆயினும், அவர்கள்பால் குடிகொண் டுள்ள பண்புகள் பலவற்றினும் சிறந்த அணியாய்த் திகழும் பண்பு அடக்கமே. அடக்கத்தால் உல்கை ஆண்ட அண்ணல்களுள் பேராசிரியர் அவர்களும் ஒருவர். செருக்கு என்பதை ஒரு சிறிதும் எப்போதும் கொள்ளாமல் வாழ்ந்த அவர்கள் வாழ்க்கையைக் கருதும்போதெல்லாம், "நற்பண்புகள் அனைத்திற்கும் உலையாத அடிப்படை அடக்கமே" என்றும், "உண்மையாகவே ஒரு பெரிய மனிதனை அறிவதற்குரிய முதல் ஆய்வு அவனது அடக்கப் பண்பே' என்றும், "என்னை நீங்கள் சமயத்துறையில்

97. திருக்காவலூர்க் கோவில், தந்துரை, பக். w-vi.

பார்க்க. 98. "Humility is the solid foundation of aii virtues"—

Confucius. 99. 'I believe the first test ot a truly great man is bio

humility,+Ruskin .