பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்... 盛罗置

வாழ்க்கை ஒழுக்க மணங்கமழும் தன்மையதாய் அமைத் தது, நாடு செய்த நல்வினைப் பயனே ஆகும்.

அருள் :

அடக்கத்தையே இயற்கை நல்லணியாகவும், ஒழுக் கத்தையே உயிர்த்துடிப்பாகவும் கொண்டு விளங்கும் பேராசிரியர் அவர்கள் உள்ளம் அருளே வடிவாகியது. அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியபோதும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக இடையருது தொண்டாற்றியபோதும், பேராசிரியர் அவர்கள் மான வர்களிடம் காட்டிய அருளுடைமை நினைப்பார் நெஞ்சை நெகிழ்விப்பதாகும். தம்மைப் பகைவராய்க் கருதுவோ ருக்கும் அருள்பாலிக்கும் பண்பு படைத்தவர்கள் நம் பேராசிரியர் என்ருல், அவர்களுடைய அருளுடைமையை விளக்க வேறென்ன கூறவேண்டும்?

பேராசிரியர் அவர்கள் தம்முடைய தனி வாழ்க்கை யில் குடத்து விளக்காய்ப் போற்றிவந்த இவ்வருளு டைமை. சென்ற சில ஆண்டுகளாகக் குன்றின் மேலிட்ட விளக்காய்க் காட்சி தரல் கண்டு. உலகு கொண்டுள்ள உவப்புக்கும் வியப்புக்கும் எல்லே இல்லை. அலந்தோர்க்கும் அயர்ந்தோர்க்கும் ஒசைபடாமல் எத்தனையோ உதவி களைச் செய்துவரும் பேராசிரியர் அவர்கள், தம் ந க்ருயார் பெயரால் இருபத்தையாயிரம் ரூபாய் அளித்துச் சென்னைப் பல்கலைக் கழகத்திலும், அதே அளவு தொகை ஈந்து அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலும் தமிழாராட்ச் இச் சொற்பொழிவுகட்கு ஏற்பாடு செய்துள்ளமைக்குத் தமிழுலகு என்றென்றும் மாரு நன்றி பாராட்டுங் கடப் பாடுடையது." பேராசிரியர் அவர்களின் வற்ரு அருள்