பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சேதுப்பிள்ளையவர்கள்........ 岑

களது வாழ்க்கை பெற்ற பரிசுகளும் பாராட்டுகளும் பலவாகும். அவற்றுள் சிலவற்றை மட்டுமேனும் ஈண்டு நினைவுகூர்தல் பொருத்தம் அன்ருே? பேராசிரியர் அவர் கள் எத்தனையோ புதுப்புதுத் துறைகட்குத் தமிழிலக்கிய உலகில் தோற்றுவாய் செய்தவர்கள். அவர்களேயே முதல்வராகக்கொண்டு பலப்பல பரிசுகளும் பாராட்டு களும் தமிழறிஞர்கட்குத் தரும் மரபும் தமிழ் நாட்டில் தோன்றியதும் வேரூன்றியதும் சாலச் சிறப்புடையன அல்லவா?

பிற்காலத்தில் தமிழ் வளர்க்கும் தலைசிறந்த நிலையங் களாய் விளங்கிய பெருமை தமிழ் நாட்டு மடங்கட்கு உண்டு.

(2) பிள்ளைப்பேறில்லாமல் வாழ்ந்த பேராசிரியர், தம் சொந்த ஊராகிய திருநெல்வேலியில் ஒரு பிள்ளைப்பேறு விடுதி அமையப் பெருவிருப்பம் கொண்டார். (அப்போது புதுவைத் தலைமை நடுவராக இருந்த) திரு.எஸ். மகராசன் அவர்களை ஒரே நிறைவேற்றுநராக அமைத்துப் பேராசிரியர் அவர்கள் வரைந்துள்ள விருப்பாவணத்தில், தமது உடைமைகள் அனைத்தும் திருநெல்வேலிப் பிள்ளைப் பேறு விடுதிக்கே அமைய வேண்டும் என்று எழுதியுள்ளார். பேராசிரியருடைய துணைவியார் திருமதி ஆழ்வார் சானகி அம்மையாரும் தம் கணவரைப்போன்றே தம் உடைமை எல்லாம் அப் பிள்ளைப்பேறு விடுதிக்கே உரியன என்று தனியொரு விருப்பாவனம் எழுதினர். இருவரும் இப்போது இல்லை. எனினும் அவர்கள் ஏற்படுத்திய அறம் வளர் கிறது-வாழ்கிறது. பேராசிரியர்-அவர் துனேவியார் உடைமைகள் ஈந்த ஒரு லட்ச ரூபாய்க்கு ஈடாகத் தமிழக அரசு ஒரு லட்ச ரூபாய் வழங்கியது. இதன் பய கைத் திருநெல்வேலியில்-டாக்டர் ரா.பி.சே. பிள்ளைப் பேறு விடுதி-கண்டியப்பேரி கால் கொண்டுள்ளது.