பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔会赛 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

அந்த மரபில் வந்த தருமை ஆதீனம் 2950-ஆம் ஆண்டில் பேராசிரியர் அவர்கட்குச் சொல்லின் செல்வர் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. எத்தனையோ ஆண்டுகளாகப் பேராசிரியர் அவர்கள் வழங்கிய சொல் லமுதைப் பருகிப்பருகித் திளைத்த மக்கள் தங்கள் நாவார மனமாரச் சொல்லி வந்த பட்டத்தையே அவர்கட்கு அளித்துச் சிறப்பித்தது வாயிலாகத் தருமை பெருமை பெற்றது. "தமிழ் எழுத்தாளர் சங்கம், பேராசிரியர் கல்கி அவர்கள் தலைமையில் சிறப்புற இயங்கியபோது, முதன் முதலாகத் தலைசிறந்த எழுத்தாளர்கட்குக் கேடயம் வழங்கும் நன்மரபைத் தோற்றுவித்தது. அதன்படி முதன்முதல் (1954) தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கேடயம் பெற்ற தமிழ்ப்புலவர் சொல்லின் செல்வர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களே.

அடுத்துக் குறிக்கத்தக்கன, தமிழ் வளர்ச்சிக் கழகத் தின் சார்பில், 1948-ஆம் ஆண்டில், காலஞ்சென்ற தமிழ்ப் பெரியார் சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமையில் சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் நடை பெற்ற முதற்பெரு மாநாட்டில், பேராசிரியர் அவர்க ளுடைய புகழ்பெற்ற ஆராய்ச்சி நூலாகிய ஊரும் பேரும் என்பது தக்சிறந்த ஆராய்ச்சி நூல் என்பதற் காக, முதன் முதலாகச் சென்னை அரசின் ரூ. 500-பரிசை தமிழ் வளர்ச்சிக் கழக வாயிலாகப் பெற்றதும், 955-ஆம் ஆண்டில் பேராசிரியர் அவர்களுடைய புகழ் பெற்ற கட்டுரைத் தொகுதியாகிய தமிழின்பம்', 'விடுதலைக்குப் பின் வெளிவந்த சிறந்த தமிழ் நூல் என்பதற்காக முதன் முதல் இந்திய அரசின் ரூ. 5000 பரிசைச் சாகித்திய அகாதமி வாயிலாகப் பெற்றதுமே ஆகும்.

பேராசிரியர் அவர்கள், தம் வாழ்நாளில் பெற்ற சிறப்புகள் அனைத்திற்கும் தலைமை தாங்கும் பெருஞ்