பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்புடXV

நக்கீரர் கழகச் செயலாளர் திரு. சிறுவை மோகனசுந்தரம் அவர்கட்குப் பேராசிரியர் எழுதிய கடிதம்.

R. P. Sethu Pijai. 10, Second Main Rd.,

B. A., B. L., D. Litt“ Gandinagar. Professor of Tamij, Madrās-20., 5–4–’61.

university of Madras.

அன்புடையீர்,

தமிழ்ப் பெரியார் பெயர் தாங்கி மழலை மொழி களால் நுங்கள் மனைவகத்தை மகிழ்வித்த அருமைக் குழந்தை இயற்கை எய்திய செய்தியறிந்து வருந்துகின் றேன்.

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தல் ஆதி பகவன் காட்டும் மறக்கருணை என்று ஆன்ருேர் அறி வுறுத்தியது உண்மையாயிற்று. கடத்தற்கரிய மனத் துயரைப் பொறுத்தற்கேற்ற அறிவின் திறத்தினை அருளுமாறு. தமிழ்த்தாயின் கருணையை வேண்டுகிறேன்.

அன்பன்,

ரா. பி. சேதுப்பிள்ளை.

இக்கடிதம் வரைந்த இருபதாம் நாள், பேராசிரியர் அவர்களும் சிவனடியைச் சேர்ந்தார்கள். இக்கடிதம் அவ்ர்கள் ஆண்டவனடி சேருமுன் எழுதிய கடைசிக் கடிதங்களுள் ஒன்ருகும். இக்கடிதம் காட்டும் அவர்கள் மனப்பண்பு நினைப்பார் நெஞ்சை நெகிழ்விக்கும்.

பேராசிரியர் எழுதிய கடிதங்களை வைத்திருக்கும் நண்பர்கள், அக் கடிதங்களின் படிகளைத் தந்து உதவ வேண்டுகிறேன். - ந. ச