பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

கடிமிளேக் குண்டு கிடங்கின்

நெடுமதில் கிரைப்பதனத்

தண்ணலம் பெருங்கோட் டகப்பா வெறிந்த

பொன்பு:ன புழிஞை வெல்போர்க் குட்டுவ!’

(பதிற்றுப் பத்து 22, 1 -27)

குட்டுவன் அடைந்த இப்பெருவெற்றியினை அவன் வழி வந்த இளங்கோ அடிகளும் தம் காவியத்தில் பொறித்துள்ளார்:

  • மிகப்பெருங் தானேயொ டிருஞ்செரு வோட்டி

அகப்பன எறிந்த அருந்திறல்’

(சிலம்பு, 28, 143-4)

இவ்வாறு குட்டுவன் அரிய பெரிய வெற்றிகள் அடைவதற்குப் பெருங்காரணமாய் விளங்கியது அவ னுடைய பெரும்பல் யானைப் படையுடைய வரம்பில் தானேயின் சிறப்பே யாகும். குட்டுவனது பாசறை, வன்மைக்கு எல்லையாகிய எல்லா நலன்களும் பொருந்தி விளங்கியது. அப் பாசறையில் போர் வேட்கையால் பரபரப்பும் துடிதுடிப்பும் கொண்ட வீரர் கணக்கற்றவ ராய்ச் செறிந்துகிடந்தனர். அவர்கள் நாண் களைதலில் லாத வில்லை எந் நேரமும் ஏந்தி இருப்பர். அவர்கள் கையி னிட்றும் அம்பு கணப்போதும் அகலாது. இத்தகைய சினம்கொண்ட மறவரின்-உடலெமக்குச் சுமை என முனியும் வீரரின்-துணை இருக்கும் போது குட்டுவன் வெற்றிமேல் வெற்றி பெற்றதில் வியப்பும் உண்டோ? பாலேக் கெளதமனர் இத்தகைய படை வீரர்களின் ஆற்றலைப் பாடியிருக்கும் திறம் கற்று மகிழ்தற்கு உரியது.

" விரவுவேறு கூலமொடு குருதி வேட்ட

மயிர்புதை மாக்கண் கடிய கழற அமர்கோள் கேரிகந் தாரெயில் கடக்கும்