பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

数巻。

பல மாவட்டங்களில் சிவலிங்கம் அமைந்த கோயில்கள் பல உள்ளன. மரங்களும் செடிகளும் அக் கோயிற்சுவர் களின்மேல் இன்று வளர்ந்தும் படர்ந்தும் வருகின்றன. அந்நாட்டின் ஒரு பகுதி சம்பா என்றே வழங்கப்பெற்றது. சம்பாவில் வாழ்ந்து வரும் சாம்பரின் (Sambar) வரலாற் றைத் தமிழ் அறிஞர்கள் படித்தல் வேண்டும். கம்போதி யாவிலிருக்கும் அங்கோர்வாட், அம்கொர்தொம் எனும் பெருநகரும், கட்டடமும், கிமோர் (Kyre) எனும் இனத் தவரால் பத்தாவது பதினேராவது நூற்ருண்டுகளில் சிறப்புற எழுப்பப்பெற்ற வான் வருடும் கட்டடங்கள். அங்குச் சுவர்கள்மீது செதுக்கப்பெற்றிருக்கும் மகா பாாதம், இராமாயணம் முதலிய வரலாற்றுச் செய்திகள், இவை யாவையும் இதுகாறும் தமிழ் அறிஞர் பார்வை யிட்டனர் அல்லர். அங்குள்ள கட்டடங்கள் பல, சிலைகள் பல, யான உருவங்கள் பல, வல்லவருடைய கட்டடச் சிற்: முறைகளைக் காட்டுவன. கிமோர் இனத்தாரின் அரசரின் பெயர்களும் வர்மன் என்னும் விகுதியைக் கொண்டவை. அக்கோர்’ என்னும் சொல்லும் "நகர்’ என்னுந் திராவிடச் சொல்லின் திரிபாகும்.

காம்போதியாவின் அரண்மனையில் நடைபெற்று வந்த நாட்டியக்கலை பரதநாட்டியக் கலையுடன் ஒப்பிட்டு பார்க்கத்தக்கது. தைலாந்தில் சிறப்பாகத் தமிழ்ப் பாக்களைத் தைமன்னரின் முடிசூட்டு விழாவில் பாடி வருகின்றனர் என்பதை, இன்று தமிழருள் சிலரேனும் அறிவர். நான் பாங்கொக்கு மாநகருக்குச் சென்றிருந்த பொழுது இந்து சமய பிராமணர் எனப்படுவர் இருக்கும் கோயில்களைப் பார்க்கச் சென்றேன். அங்கு அவர் களுடைய ஏடுகளிலிருந்து தம் மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடிவரும் செய்யுள்களை அவர்கள் பாடிய பொழுது, தமிழ் என்று அறியாது அவர் பாடும் ஆதியும்