பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£6

அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை என்னும் திருவெம்பாவைப் பாட்டைக் கேட்டுப் பெருவியப்பு எய்தினேன்.

திருப்பாவை திருவெம்பாவைத் திருநாள்களைப் பண்டு மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வந்தார்கள் தைநாட்டு மக்கள். அக்கொண்டாட்டம் பொதுமக்களின் கொண்டாட்டமாயும் அமைந்தது என்பதற்கு அங்குள்ள மாபெருங்கோயிலுக்கு அண்மையில் உள்ள உயர்ந்த ஊஞ்சல் நிலைகளே சான்ருவன. இன்றும் திருப்பாவை, திருவெம்பரவைத் திருநாள்களை அப்பிராடினர்கள் கொண்டாடி வருகின்ருர்கள். அங்குள்ள அவர்களது கோயில் அமைப்பும் வழிபாடும் தென்னிந்தியக் கோயில் அமைப்புக்களையும், வழிபாட்டு முறையினையும் தழுவி அமைந்ததாக, அவர்களின் அரசகுரு எனக்குக் கூறினர்.

தை மொழியில் இருக்கும் இராமாயணம் வான் மீகியின் இராமாயணத்தைத் தழுவியது அன்றென்றும், பெரும்பாலும் கம்பரின் இராமாயணத்தையே தழுவி இருத்தல் கூடுமென்றும் பியானுமன் எனும் கதை அறிஞர் எனக்குத் தெரிவித்தார். மேலும் தம் மொழி யில் ஐ விகுதிகளும் அன் விகுதிகளும் கொண்ட சொற் கள் பலவென்றும்; தம் இராமாயணத்தின் காவியச் செல்வரின் பெயர்கள் பெரும்பாலும் இராமன், சுக்ரீவன் என்ற தமிழ்ப் பெயர்களைப் போலவே அமைந்திருக் கின்றனவென்றும் குறிப்பிட்டார்.

மேலும், தை நாட்டின் வெண்கலப் படிவங்கள் பல்லவர் சோழர் காலத்துத் தமிழ் நாட்டுப் படிவங்களை போன்றவையென்று தை நாட்டில் சிற்பம் கற்பிக்கும் இத்தாலிய சிற்பியார் ஒருவரும் எனக்குச் சொன்னர். அந்த அறிஞரே தங்கம்' என்னும் சொல். தமிழிற்குச்