பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

சீனத்திலிருந்து தை நாடு வழியாக விந்த ஒரு சொல் என் றும் கருதினர்.

  • தவத்திரு தனிநாயக அடிகள் தமிழ்த் தாது (1962,)

பக். 116-120 தவத்திரு தனிநாயக அடிகளாரின் ஒன்றே உலகம் தரும் செய்திகள் சில :

  • கம்போதியாவின் கட்டடங்களில் முதன்முதல் அங்கோர்வாட்டையே பார்க்கச் சென்றேன். அங்கோர்’ என்னும் சொல் நகர், நகரா’ என்னுஞ் சொல்லின் திரிபு. நகர் என்பது வடமொழிச் சொல்லென்று பொது வாகக் கருதப்படுகின்றது. ஆயினும், அச்சொல், வட மொழியொழிந்த ஏனைய இந்தோ-ஐரோப்பிய மொழி களில் இல்லாமையாலும், திராவிடர்நகரங்களை அமைப்ப தில் பண்டு சிறந்து விளங்கியதாலும், நகர்! என்னும் சொல் திராவிட மொழிக்கே பண்டு தொட்டு உரிய சொல் என்று கருதுவதற்கு ஆதாரங்கள் சில உள.

கம்போதியாவின் கட்டடச் சிற்பக் கலைகளின் சின் னங்களைப் பார்க்கும்பொழுது, அவை தமிழ் நாட்டுக் கலை களை எங்ங்னம் தழுவியவையெனும் வின எழுவதியல்பு. அங்கோரின் பெரும்ையும் பல்லவர் சோழர் பெருமையும் ஒரே காலத்தவை. அங்கோர்வாட்டின் கோபுரங்களை யும், கட்டட அமைப்புக்களையும், திருமாலின் உருவங்களை யும், யானைப்பீடத்தையும் ஆராயும்பொழுது, மாமல்ல புரம், காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலுள்ள கட்டடச் சிற் பக் கலையைக் கிமோர் அறிந்திருக்க வேண்டுமென்ற நம் பிக்கை உறுதியாக உண்டாகிறது. மேலும் இவ்வரசரின் 'அன்' விகுதி பெற்ற பெயர்களாகிய சயவர்மன், இந்திர வர்மன், சூரியவர்மன் போன்ற பெயர்கள், பல்லவ மன்ன ருடன் எத்தகைய தொடர்பைக் கொண்டவர்கள் என்ற கேள்வியை எழச்செய்யும்.