பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

வழிபாடு ஆற்றுவான். காண்பார் அஞ்சத்தக்க அச்செய லேப் பாலக் கெளதமஞர் சுவை ததும்பச் சொல்லோவிய மாய் எழுதிக் காட்டுகின்ருர்.

சேர வேந்தனது மயிர்க்கண் முரசம் விண்ணதிர முழங்கும். முரசுறை கடவுளுக்குப் பலியிட்டு மந்திரம் கூறுவோணுகிய உயர்ந்தோன் எண்டிசையும் அதிர, மறவர் நெஞ்சில் சினத்திக் கிளர்ந்தெழ, மந்திரங்களை முழங்குவான். குருதி கலந்து கள்ளுடனே அவன் படைக் கும் பலியினத் தீண்டப் பெரிய கண்களையுடைய பேயும் அஞ்சும். தெய்விக ஆற்றல் படைத்த அப்பலியின எறும் பும் மொய்யா. ஆயினும், அப்பலியினக் கரிய கண்ணு டைய காக்கையும் பருந்தும் இருந்து உண்ணும், (அவ் வாறு அவை உண்ணல் போரில் வெற்றி உண்டாதற்குரிய நிமித்தம் ஆகும்). அந்நிலையில் குட்டுவனது முரசம் மண் அதிர முழங்கும். அம் முரசொலி செருப்புகல் மறவரைக் குரலெடுத்துப் பாடும் இசைவிருந்தோடும் பெருஞ் சோற்று விருந்தை உண்ணக் கூவி அழைக்கும்.

முரண்மிகு கடுங்குரல் விசும்படை பதிரக் கடுஞ்சினங் கடாஅய் முழங்கும் மந்திரங் தருக்திறன் மரபிற் கடவுட் பேணியர் உயர்ந்தோனேக்திய வரும்பெறற் பிண்டம் கருங்கட் பேய்கன் கைபுடையூஉ கடுங்க கெய்த்தோர் தூஉய நிறைமகிழிரும்பலி எலும்பு மூசா விதும்பூது மரபிற் கருங்கட் காக்கையொடு பருந்திருந் தார ஓடாப் பூட்கை யொள்பொறிக் கழற்காற்: பெருஞ்சமங் ததைந்த செருப்புகன் மறவர் உருமுகிலனதிர்க்குங் குரலொடு கொளபுணர்ந்து பெருஞ்சோ றுகுத்தற் கெறியும் கடுஞ்சின வேந்தே கின் றழங்குகுரன் முரசே.",

(பதிற்றுப்பத்து, 30, 32-44)