பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து #9,

8. அழிவால் விளைந்த அவலம்

எமனே ஒத்த வீரர்களையுடைய குட்டுவனது படை, பகைவர் நாட்டில் சீறிப் பாய்ந்தால், அந்நாட்டுக்கு நேரும் அழிவு சிறிதாமோ? அவ்வாறு நேர்ந்த அவலக் காட்சிகள் பலவற்றை மூன்ரும்பத்து நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டுகிறது. குட்டுவன் தன் ஆட்சியின் தொடக்கக் காலத்தில் அளக்கலாகாப் போர் வெறி கொண்டவனுய் இருந்திருத்தல் வேண்டும். மூன்ரும் பத்திலுள்ள பெரும்பான்மைப் பாடல்கள் அவன் போர் வெற்றியையும், ஆற்ருெளுச் சினத்தால் பகைவர் நாட் டிற்கு அவன் விளைத்த அழிவினையுமே படம் பிடித்துக் காட்டுகின்றன. குட்டுவன் சினத்தால் விளைந்த பேரழி வினை ஆசிரியர் கெளதமஞர் சொற்சித்திரங்களாக்கிக் காட்டுந்திறன் நம் உள்ளத்தை உருக்குகின்றது! சேர வேந்தனது சினம்கெழுமிய சிவந்த கண்களில் படாத வரையில் அந்நாடுகள் சோலேவனமாயிருந்த காட்சியும், அவன் கோபப்பார்வை பட்டதும் அவை பாலைவனங்க ளாய் மாறிய பரிதாபக் காட்சியும், கெளதமஞர் பாடல் களில் படம்படமாய் விளங்குகின்றன:

"பகைவர் நாடு நீர்வளம் செறிந்த நன்ஞடு. எந்நாளி லும் அந்நாட்டில் பெருகிவரும் புதுப்புனலத் தடுத்து நிறுத்துவோர் பறையறைந்த செய்யும் ஆரவாரமும், நீர் விளையாடுவோர் செய்யும் ஆரவாரமும், பல்வேறு விழாக் களிலே திரண்ட மக்கள் செய்யும் ஆரவாரமும் மிகுதி யாய் இருக்கும். வற்ருத வளங்கொழிக்கும் அத்தகைய நாடுகள், குட்டுவ, நின் சினத்திற்கு இலக்கானமையால் ஆங்கே பட்டப்பகலில் குறுநரிகள் ஊளையிடும். கோட் டான்கள் கூவும்; அவற்றின் குரலொலிக்கு ஒப்பப் பேய்