பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

அள்ளற் பட்டுத் துள்ளுபு துரப்ப நல்லெருது முயலு மணறுபோகு விழுமத்துச் கரகாட் டானர் கம்பலை மில்ல்து பூசலறி கன்னட் டியான ரருஅக் காமரு கவினே.”

(பதிற்றுப்பத்து.27) மேற்கண்ட பாலக் கெளதமனரின் பாடல்களைப் படிக்கும்போது தம் சிந்தன. எங்கெங்கெல்லாமோ செல் இன்றது. அறிவும் நாகரிகமும் மிகவும் வளர்ந்துவிட்ட தாகக் கருதப்படும் இவ்விருபதாம் நூற்ருண்டிலேயே, தேர் இன்னும் தவிர்க்க முடியாத ஒரு தீமையாகவே திலைத்து நிற்கிறது என்ருல், ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு இருந்த சமுதாயம் போரைத் தவிர்த்திருக்க முடியாது என்பது தெளிவு. என்ருலும், அந்நாளிலேயே போரின் கோடுமையை எண்ணிச் சான்றேர்களின் நெஞ்சம் எவ்வெவ்வாறெல்லாம் குமுறியது என்பதைப் பாலக் கெளதமளுரின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக் கனியென நமக்கு விளக்கிவைக்கின்றன.

" ஆங்குப், பண்டுகற் கறியுகர் செழுவள நினைப்பின்

கோகோ யானே கோதக வருமே!’

(பதிற்றுப்பத்து, 28: 4-5) என்ற சொற்களில், புலவர் பெருமானின் அளவற்ற மனத் துயரம் புலளுகிறது. அன்ருே சீற்றத்தால் விளையும் சிறுமையை-அழிவால் விளையும் அவலத்தை, இத்தகைய பாடல்கள் வாயிலாக எடுத்துரைத்துக் குட்டுவன் போன்ற நாடாளும் வேந்தன் நெஞ்சை நல்வழிப்படுத்தக் சங்ககாலச் சான்ருேர் கருதினர் போலும் அவ்வாறு காலத்தை ஒட்டிச் சமாதானத் தூதுவர்களாய் அவர்கள் செய்த சீரிய முயற்சியினத் தமிழ் நெஞ்சம் படைத்தார் உணர்ந்து போற்றுதல் ஒருதலை.