பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து #7

வைராக்கியம் கொண்டான்; துறவு உள்ளம் பூண்டு தன் ஆசிரியரைப் பின் தொடர்ந்து நாடு நீங்கிக் காடு போந் தான்; வீடு பெற்ருன். வீரருள் வீரனுய் விளங்கிய ஒரு பேரரசன் வாழ்வு ஞானியருள் ஞானியர் போற்றும் தவ வாழ்வாய் முடிந்தது. உணர்ச்சியும் உருக்கமும் நிறைந்த இவ்வரலாற்றை மூன்றும் பத்தின் பதிகம் அழகுறப் பாடுகிறது:

  • இமைய வரம்பன் தம்பி அமைவர

உம்பற் காட்டைத் தன்கோல் நிறீஇ அகப்பா வெறிந்து பகற்றீ வேட்டு மதியுறழ் மாபின் முதியரைத் தழீஇக் கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்துக் கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி இருகடல் நீரும் ஒருபகல் ஆடி அயிரை பரைஇ ஆற்றல்சால் முன்பொடு ஒடுங்கா கல்லிசை உயர்ந்த கேள்வி நெடும்பார தாயஞர் முந்துறக் காடுபோக்த பல்யானைச் செல்கெழு குட்டுவனப் பாலைக் கெளதமஞர் பாடினர் பத்துப்பாட்டு.”

(மூன்ரும் பத்து, பதிகம்)

9. பழந்தமிழக இயற்கை-நிலவளம்

சங்க இலக்கியப் புலவர்கள் இயற்கையின்பால் கொண்டிருந்த ஈடுபாடு ஒப்புயர்வற்றது. இயற்கை இன்பத்தை ஐம்புலன்களாலும் ஆரத்துய்த்த அச் சான் ருேர்கள், அவ்வின்பத்தைத் தேனினும் இனிய தீந்தமிழ்ப் பாடல்களாய் வடித்து வைத்துள்ளார்கள். அவர்களுள் தலைசிறந்த ஒருவரே பாலைக் கெளதமஞர். அவர் பாடி யுள்ள பாடல்கள் பழந் தமிழகத்தின் நிலவளத்தைஇயற்கை அன்னை நாணில அரங்கில் ஆடிய அழகுக் கூத்