பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்புத்துள் மூன்ரும் பத்து 罗莎

ஆதனை அறுத்துக் கொள்வதோடு ஒழியாது அதன் அரி தாலேயும் அகழ்ந்து சிதைத்து ஆங்கு மலரும் பல வகைப் பூக்களையும் கொண்டு மக்கள் மலர் விழா எடுப்பார்கள். தேன் சொரிய நின்ற மருதமரங்களை வெள்ளிய நுரை யைச் சுமந்து பாய்ந்து வரும் சிவந்த புதுவெள்ளம் அடி யோடே சாய்க்கும். அவ்வெள்ளத்தை அணை கோலித் தடுப்பான் வேண்டிக் கனத்த வைக்கோற் புரிகள் கொண்டு மணற்கோட்டைகளைக் கட்டுவர். அவையும் அவ்வெள்ளத்தில் சிதைந்து கரைந்து போகும். அது கண்ட மக்கள் முன்னினும் அதிக முயற்சியோடு, உயரமும் திண்மையும் பொருந்திய அனேகளை ஆக்கி நீரைத் தடுத்து வென்றி காண்பார்கள். அப்போது அவர்கள் செய்யும் மகிழ்ச்சி ஆரவாரம் மிகப்பெரிதாய் விளங்கும். வெள்ளத்தைச் சிறைப்படுத்தி வெற்றியும் மகிழ்ச்சியும் கொண்ட மக்கள் கூட்டம் நாட்டின் மூதுர்க்கண் நிகழும் திருவிழாவிற்குச் சென்று, அதனைக் கண்டு மிகுந்த ஆரவா ரத்துடன் மீளும்.

  • " கால மன்றியும் கரும்பறுத் தொழியாது

அரிகா லவித்துப் பலபூ விழவின் தேம்பாய் மருத முதல்படக் கொன்று வெண்டலச் செம்புனல் பரந்துவாய் மிகுக்கும் பலசூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலிற் புகன்ற வாயம் முழவிமிழ் மூதுர் விழவுக்கானு:உப் பெயரும் செழும்பல் வைப்பிற் பழனப் பாலும்.'

(பதிற்றுப்பத்து, 0ே: 14-21)

முல்லை:

வானுற ஓங்கிய மரங்கள் அடர்ந்த காடும் காடு சார்ந்த பகுதியுமாகிய முல்லை நிலத்துக் காடுகளில் பல் வகைப் பூக்களும் உதிர்ந்து வாடிக்கிடக்கும். ஆக்காடுகள்