பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊莊 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தாம் பயன் பல அளிக்கும் தன்மையினின்றும் திரிந்து செவ்வரக்குப் போன்ற நுண்ணிய மணல் பொருந்திய மட்குன்றுகளைக்கொண்டு விளங்கும். ஒள்ளிய நெற் றியை யுடைய மகளிர் காலில் செருப்பணிந்து அப்பகுதிகளில் திரிவர்.

  • பல்பூஞ் செம்மற் காடுபவ மாறி

அரக்கத் தன்ன நுண்மணற் கோடுகொண்டு ஒண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும் விண்ணுயர்க் தோங்கிய கடற்றவும் பிறவும்."

(பதிற்றுப்பத்து, 30: 26-29)

மலையும் மலேசார்ந்த இடமுமாகிய இக் குறிஞ்சி நிலத்தின் அழகை மூன்ரும் பத்தின் இறுதிப் பாடலில் ஆசிரியர் சிறப்பாகப் பாடியுள்ளார். குறிஞ்சி நிலப்பகுதி களே அடுத்து முல்லைநிலப் பகுதிகளும் உள்ளன. இவ்விரு நிலங்களிலும் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையும் மனப்பாங் கும் அறிவதற்குப் பேரின்பம் தருவனவாகும். காந்தட் பூவால் தொடுக்கப்பட்ட கண்ணியினைத் தலையில் அணிந்து கொலைபுரியும் வில்லினக் கையிலே ஏந்தி வரும் வேட்டுவர், செவ்விய ஆமாவின் இறைச்சியுடனே காட்டி டத்து வாழும் வலிமை பொருந்திய யானையின் தந்தத் தையும் கொண்டு வருவர்; செல்வச் செழுமை நிறைந்த புன்புல வைப்பில் இருந்த பொன்னுடைக் கடைத்தெருக் களிற் புகுவர்: ஆங்கே தாம் கொண்டுவந்த இறைச்சியை பும் தந்தத்தையும் கொடுத்துவிட்டு, அவற்றிற்கு ஈடா கப் பொன்னைப் பெருமல் வடித்த கள்ளை வாங்கி உண்பர். உயிர்க்கொலை புரியும் வேட்டுவர் உள்ளம் இருந்தவாறு ஆது'