பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీడీ ஆராய்ச்சிக் கட்டுரைகள்

வாய்ந்ததாகும். விளையாடும் மகளிர் பூங்கொத்துக்களே விருப்புடன் கொய்தமையால் சிதறிக்கிடக்கும் ஞாழல் எனப்படும் புலிநகக் கொன்றை மரங்கள் நிறைந்த பெரிய நீர்த்துறைகளே உடையது நெய்தல் நிலம். அங்கே நீல மணியாற் செய்த பாத்திரங்களைப்போன்று கரிய இதழ் களே உடைய நெய்தற்பூக்கள் குளிர்ந்த கழிக்கண் மலர்ந் திருக்கும். அக்கழிகளில் மீன் வேட்டமாடி புன்னேயின் வெள்ளிய பூங்கொத்துக்கள் செறிந்த கிளைகளிடத்தே தாரை முதலிய பறவைகள் தங்கும். மக்கள் சென்று தங்குதற்குரிய கானற் சோலைகளில் செறிந்த மணல் அடைந்த கரையில் அடம்பங் கொடிகள் வளர்ந்திருக்கும். அவற்தை அலேத்து வரும் அலேகளால் ஒதுக்கப்பட்ட சங்குகளின் கூட்டம் அலறிய வண்ணம் இருக்கும். வளே பலதக் கேட்டு ஒடிப்போந்து அதன் முத்தை எடுக்க முனை வார், அவ்வளேயுடனே எறியப்படும் பவளத்தையும் எளிதில் எடுத்துச் செல்வர். அத்தகைய வளமார்ந்தது நெய்தல் நிலம்.

பழந்தமிழகத்தின் நிலவளத்தை இதுகாறும் பொது வகையாற் கண்டோம். இனி மூன்ரும் பத்தில் வேறு காரணங்களாற் சிறப்பாகக் குறிக்கப் பெறும் கொங்கு நாட்டைப்பற்றியும் பூழி நாட்டைப் பற்றியும் பாலக் கெளதமஞர் சுதும் செய்திகளை ஈண்டு அறிதல் பொருத்தமும் பயனும் உடையதாகும்.

கொங்கு நாடு:

பல்யானைச் செல்குழு குட்டுவன் தன் நெஞ்சுரலுைம் படை வலியாலும் வென்ற நாடுகளுள் சிறந்தன கொங்கு நாடும், பூழி நாடும் ஆகும். பண்டை நாளில் மூவேந்தர் பாலும் போர்நசை தோன்றுவதற்குப் பெருங்காரண