பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 器

மாய் இருந்தது இக்கொங்கு நாடு. இந்நாட்டைச் சுற்றி லும் போர்வெறி கொண்ட மறவர் பலர் வாழ்ந்து வந்த னர். இத்தகைய பகுதியைத் தன் குருதி தோய்ந்த வேலின் திறத்தால் வென்று ஆண்டான் குட்டுவன்.” அவன் ஆட்சியின் கீழ்ப்பட்ட இந்நாடு, வேறு பல் வனமும் உடைவதே எனினும், ஆற்று நீர்வளம் அவ்வள வாக இல்லாதது. எனவே, கொங்கு நாட்டு மக்கள் பெரி தும் கிணறுகளில் ஊறும் ஊற்றுவளத்தையே நம்பி வாழ்ந்தனர். கொங்கு நாட்டின் சிறந்த செல்வங்களுள் ஒன்ருய் இருந்தது கால்நடைச் செல்வமே ஆகும்.கொங்கு நாடு மேட்டு நிலப்பகுதி. எனவே, அங்கு ஆனிரைக்கு வேண்டும் நீர் கிடைத்தல் அரிது. அதனால் கொங்கர்கள் கூரிய இரும்புக் கோடரிகளைக் கொண்டு நிலத்தை அகழ்ந்து மிக ஆழ்ந்த கிணறுகளை அமைப்பர். அப் பிள்ளைக் கிணறுகளில் நீண்ட கயிறுகளில் பிணைக்கப் பட்ட சிறிய முகவைகளைக் கட்டிவிட்டு நீர் முகப்பர். கொங்கு நாட்டில் நீர் கிடைத்தல் அருமையாதலால் நீர் வேட்கைகொண்டு அலேயும் ஆனிரைகள் முகவை களைக் கண்டவுடனே, அவற்றின் குறுமையும் நீர்மையும் நோக்காது மொய்க்கும். அவ்வாறு மொய்ப்பனவற்றைக் கொங்கர் நீர் முகந்து உண்பிப்பர். பசு வளமிக்க கொங்கு நாட்டின் நிலை இத்தகையதாகும்.

'பொன் செய் கணிச்சித் திண்பிணி உடைத்து சிரறுசில் ஊறிய கீர்வாய்ப் பத்தற் கயிறுகுறு முகவை மூவின மொய்க்கும்

1. Cera Kings : K. G. S. Aiyat, PP. 33.34, 2. குட்டுவன் தான் கைப்பற்றிய இப்பகுதிகளைத் தன் ஆணைக்கு உட்பட்டுக் கருவூரிலிருந்து ஆளுமாறு கருவூர் ஏறிய ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் இரும்பொறையை தியமித்தான் &Tairo IIf (Cera Kings: K. G. S. Aiyar, Chap. H. pp. 33.35.]

وسميني