பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

ஆகெழு கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தானே வெருவரு தோன்றல்'

(பதிற்றுப்பத்து, 22:12-1)

பூழி காடு:

கொங்கு நாட்டைப்போலக் குட்டுவனது வெற்றிக்கு இலக்கான நாடுகளுள் மற்ருென்று பூழி நாடு' ஆகும். இந்நாடு கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன் ருகக் கூறப்படும். இது மலபார் மாவட்டத்தில் உள்ள பொன்னுணித் தாலுக்காவில் அடங்கியது என்பர். இந் தாடு பண்டு நன்னன் குடியினரால் ஆளப்பட்டு வந்தது என்னும், இந்நாட்டார் அடுத்தார்க்குத் துன்பம் இழைக் கச் சிறிதும் பின்வாங்கrத மறவர் என்றும் கூறுவர்."

பூழி நாட்டில் சிறப்புடன் வாழ்ந்த குடியினர் ஆயர் ஆவர். அவர்கள் மிகப்பெரிய ஆனிரைகளையும் கணக் கற்ற களிறுகளேயும் உடையவர்கள்; செருப்பு என்னும் மலேக்கு உரியவர்கள். அவர்கள் முல்லைப் பூவாலாய கண்ணியணிந்து ஆனிரைகளைப் புல் நிறைந்த பரந்த வெளிகளில் மேக விட்டுவிட்டு, காட்டில் சிதறிக் கிடக் கும் மணிகளைப் பொதுக்கி வருவார்கள். மலை வளமும் மணி வளமும் பசும்புல் வளமும் நிறைந்த பூழி நாடு இத்தன்மையதாகும்.

'முல்லைக் கண்ணிப் பல்லான் கோவலர் புல்லுடை வியல்.புலம் பல்லா பரப்பிக் கல்லுயர் கடத்திடைக் கதிர்மணி பெறுTஉம் மிதியல் செருப்பிற் பூழியர் கோவே!"

(பதிற்றுப்பத்து, 21 :20–23)

4. Aftalabar #anual: Vol. i. pp. 647, 666. 2. Cera Kings: K. G. S. Aiyar, p. 33.