பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ஆராய்ச்சிக் கட்டுரைகள்

என்று இளங்கோ அடிகள் புனைந்துரைத்துள்ள திறம் நினைந்து நினைந்து மகிழ்தற்குரியதாகும். வான் பொய்ப் பினும் தான் பொய்யா வளம் படைத்த இத்தகைய பேரியாறு பாலக்கெளதமஞர் உள்ளத்தைக் கவராமல் போகுமோ? கோடை நீட்டித்ததால் குன்றுகள் பொலி விழந்து தோன்ற, அருவிகள் பொழியாது வற்றியுலர்ந்த :ெசிய வறட்சிக் காலத்தும் கரையளவு உயர்ந்து நீர் பெருகி வழிந்து இழியும் அகன்ற இடத்தையுடைய பேரி பாது என்னுங் கருத்தமையப் பாடுகின்ருர் புலவர்.'

10. தெய்வங்கள் இயற்கை வளங்களால் செழிப்புற்று விளங்கும் ஒரு நாட்டின் மக்களைப் பசியும் பிணியும் பகையும் தீண்டுவது அரிது. அமைதி அரசோச்சும் நாட்டில் உயர்ந்த நாகரிகம் ஓங்கி வளர்தல் இயற்கை சிறந்த நாகரிகத்தின் மணி முடியே மாசற்ற சமயநெறி. பழந்தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சங்க இலக்கியத்தைக் கொண்டு துருவி ஆராய்வார், அவர்பால் உயர்ந்த சமய நெறிகள் குடி கொண்டிருந்தன என உணர்தல் ஒருதலை. ஈண்டுப் பாலைக் கெளதமனர் பாடல்களில் வரும் இரு தெய்வங் களைப் பற்றிக: குறிப்புக்களை மட்டும் ஒர்வோம்: முருகன் :

குட்டுவனுடைய கூற்றை ஒத்த வலியுடைய வீரர்கள் போரிட்டு அழித்த நாடுகள், முருகவேள் வெகுண்டு பொருது அழித்தலால் செல்வக்களியிழந்தசூரனின் மூதூர் போலும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியைப்

1. கோடை நீடக் குன்றம் புல்லென அருவி பற்ற பெருவறற் காலேயும் நிவந்துகரை யிழிதரு நனந்தலைப் பேரியாறு."

(பதிற் 28, 8.10)