பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 4岳

மழவா :

பழந்தமிழ் வீரர்களுள் தனிச்சிறப்பு வாய்ந்தவர் மழவர். அவர்கள் வெட்சி, கரந்தை, வஞ்சி, உழிஞை. நொச்சி, தும்பை, வாகை எனப் போர்க்குரிய கண்ணிகள் பலவற்றையும் அணிவார்கள். ஒருவகை வீரர்களாகிய அவர்கள் குதிரைப்படையை வைத்திருந்தார்கள்: போருடற்றுவதில் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள்.

L ត្r r :

கலை மலிந்த நாடு பழந்தமிழ் நாடு, இசையையும் கூத்தையும் போற்றிப் பழந்தமிழ் நாட்டின் கலைச் சிறப்பை நாளும் செழுமை உடையதாக்கியவர்கள் வயிரிய மக்களே. பை ஒன்றில் தங்கள் இசைக் கருவிகளைத் தொடுத்துக் கட்டியிருப்பார்கள். குற்றமற்ற திவவு யாழினையுடைய வ யி ரி ய ர் அவ்யாழைப் பண்ணுெடு பொருந்த எழுப்பி, ஊர் மன்றத்தை அடைந்து, மறுகு களின் சிறைக்கண்ணே நின்று பாடுவர். வ்ரிசை அறிந்த வள்ளல்கள் வழங்கும் பரிசில்களைப் பெற்று அவர்கள் மகிழ்ச்சியால் ஆடுவார்கள், பாடுவார்கள்.

14. இலக்கிய வளமும் கயமும்

பாலைக் கெளதமளுர் பாடல்களில் உள்ள இலக்கிய வளம், அவ்ர் பாடல்களை ஊன்றிப் படிப்பார்க்குக் கழி பேருவகை அளிப்பதாகும். அணிகளில் எல்லாம் சிறந்த அணி உவமை அணியாகும். எனவே, இவண் மூன்ரும் பத்திலுள்ள உவ்மைகளின் சிறப்பை மட்டும் சிறிது நினைவு கூர்வோம்:

1. காலை யன்ன சீர்சால் வாய்மொழி. (பதிற். 21 : 4)

2. "வேயுறழ் பணத்தோள்.' (பதிற். 21 : 37)