பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிற்றுப்பத்துள் மூன்ரும் பத்து 47

நயம் ததும்பப் பாடும் திறம், தமிழ் மொழியின் அழகை யும் புலவரின் நுண்மாண் நுழைபுலத்தையும் புலப்படுத் துகின்றது.

t5. பெயர்க்காரணம்

பதிற்றுப்பத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் அப்பாடலில் உள்ள சிறந்த சொற்ருெடர் ஒன்று காரண மாக அழகிய பெயர் அமைந்துள்ளது என்பதைத் தொடக்கத்திலேயே கண்டோம் அல்லவா? அதன்படி மூன்ரும்பத்தில் உள்ள பத்துப் பாடல்களுக்கும் பத்து அழகிய பெயர்கள் அமைந்து உள்ளன. அப்பெயர் களையும் அவை அமைந்த காரணங்களையும் ஈண்டுக் காண் Guireb:

1. அடுநெய் ஆவுதி !

சேரன் தலைநகரில் இருபெரு வேள்விகள் நடை பெற்றன. ஒன்று, வேத வேள்வி மற்ருென்று, விருந்து வேள்வி எனக் கண்டோம் அன்ருே? விருந்து போற்றும் இல்லற வேள்வியில் விருந்தினரை உண்பித்தற்குச் சமைக்கப்படும் உணவின் கட் பெய்யப் படும் நெய்யை, அடுநெய் ஆவுதி' என்று புலவர் சிறப்பித்துள்ள மையால், இப்பாட்டு இத் தொடராற் பெயர் பெற்றது.

2 கயிறு குறுமுகவை :

ஆற்றுநீர் வளமற்ற கொங்குநாட்டில் பிள்ளைக் கிணறுகளில் நீண்ட கயிறுகளில் சிறிய முகவைகளைப் பிணைத்துப் பயன்படுத்துவர், தன்னுல் நீர் வாங்குவது

1. இப்பகு தி பற்றிய விரிவான விளக்கங்கட்குப் பதிற் றுப்பத்து டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் அவர்களின் பதிப் பையும், ஒளவை, சு. து. அவர்களின் பதிப்பையும் காண்க.