பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ ஆராய்ச்சிக் கட்டுரைகள்

கூட்டத்தைப் புகன்ற ஆயம் என்று சிறப்பித்ததால் இப்பெயர் வந்தது.

16. புலவர் உள்ளம்

பாலக்கெளதமஞர் திருவுள்ளம்- தமிழ் உள்ளம்போர் விரும்பாப் பேருள்ளம்-இயற்கைத் தேனுண்டு பாடும் இன்ப உள்ளம்-வறுமைக்கும் எளிமைக்கும் இரங்கும் விழுமிய உணர்வுள்ளம்-வீரத்தையும் கருணை யையும் கண்டு இறுமாப்பும் இறும்பூதும் கொள்ளும் சிறந்த உள்ளம்-அவர் பாடல்களில் உள்ள ஒவ்வொரு சொல்லிலும் விளங்கக் காண்கிருேம். ஆனல், எல்லா வற்றிற்கும் மேலாக, அவர் உள்ளத்தில் இருந்த பேரு ணர்வு அவர் கருத்தைக் கவர்ந்த குட்டுவனேப் பற்றியதே ஆகும் என்றல் மிகையாகாது.

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் தன் காதல் மனைவி யுடன்-பெருந்தேவியுடன்-இருந்த காட்சி, புலவர்பெரு மானுக்குக் கண்ணிறைந்த காட்சியாய் லிளங்கியிருத்தல் வேண்டும் என்பது, அவர் பாடல்களில் இரண்டு இடங் களில் வரும் இனிய குறிப்புக்களினல் நன்கு புலகிைறது கற்புடைய பெருந்தேவியின் சிறப்பை- அழகைஎல்லாம் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் பத்தி யோடு போற்றிய பாலைக்கெளதமனர், இறுதியாக,

  • 蟾 aభజ4 途** 'இவளொடு ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே!"

(பதிற்றுப்பத்து, 21 :37-38)

என்று வாய் நிறைந்த சொற்களால் வாழ்த்தும் பகுதி யைப் படிக்கும்போது, நம்மை அறியாமல் நம் மனம் உருகிவிடுகிறது: பழந்தமிழ்ப் புலவரின் கலையுள்ளம்