பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

瑟总

அஞ்சி நடுங்கலும் பொய்ம் மொழியும், அன்பு மிகவுன்மையும், வரம்பு மீறிய தண்டனைகளை வழங்கலும் இவ் வுலகத்தே அறமறிந்து செய்யும் அரசுமுறை நடத்தற் குப் பெரிய வழியடையாக நிற்கும் தீங்குகளாகும். பலகாலும் சிந்தித்துப் பயன் காணக்கூடிய சிறந்த ஒர் அறிவுரையைச் செந்தமிழ் நவம் மிக்க ஒரு பாட்டில் புலவர் எவ்வளவு அழகாகப் பொதிந்து வைத்துள்ளார் பாருங்கள்: பாலக் கெளதமஞர் கூறிய அறிவுரை ஈரா பிரம் ஆண்டுகட்குமுன் வாழ்ந்த முடிகெழு மூவேந்தருள் ஒருவனுக்குத்தான். ஆயினும், எல்லாரும் இந்நாட்டு மன்னராகியுள்ள இந்நாளில்-முடியரசு ெதாலேத்து குடியரசு மலர்ந்துள்ள இந்நாளில்-முன்னினும் ஈராயிரம் மடங்கு அதிகமாகவே பாலக்கெளதமஞர் சொல்லிச் சென்ற பேருண்மையை நாம் போ ற்றிப் பயன்படுத்த வேண்டிய இன்றியமையாத நிலையில் இருக்கின்ருேம். பாலக்கெளதமஞர் நமக்குச் சொல்விச் சென்ற அறிவுரை மிகச் சிறந்தது பயனுடையது. வாழ்க்கை வின் எல்லாத் துறைகளிலும் அவ்வுண்மை வழி நின்று தாம் தம் தாயகத்தை-தமிழகத்தை-உலகின் கண் களில் உகர்த்துவோமாக! நம் தமிழன்னையின் 'நெஞ்சு மலி உவகையைப் பெறுவதற்கு அதனினும் சிறந்த தொண்டு உலகில் உண்டோ?

மூன்ரும்பத்தின் ஆசிரியராகிய பாலைக் கெளதமஞர் எத்தனையோ அருந்தமிழ்ப் பாடல்களே இயற்றி இருக்கக் கூடும். பாலை பாடுவதில் வல்லவராதலால் இவரைப்

ാ~

சினன்ே காமங் கழிகண் ளுேட்டம் அச்சம் பொய்ச்சொல் அன்புமிக வுடைமை தெறல் கடுமையொடு பிறவுமிவ் வுலகத் தறந்தெரி திகிரிக்கு வழியடையாகும்.'

(பதிற்றுப்பத்து, 22 : 1-4)