பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சிக் கட்டுரைகள்

§§

இப்பொழுதும் மலாயாவில் எட்டுலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்கிரு.ர்கள். 1957-ஆம் ஆண்டுக் குடியிருப்புக் கணக்குப்ப+ மலாயாக் கூட் டரசில் மொத்த மக்கள் தொகை ஆ2,76,915, இதில் மலாயர் : ; மலேஷியர் 5.4%. சீனர் 9% இந்தியர் 11% இவர்களுள் பெரும்பாலார் தமிழ)ே: ஐரோப்பியர் 0.2% யுரேஷியர் 0.2%; மற்றவர்கள் ப9% சிங்கப்பூர் அரசின் மொத்த மக்கள் தொகை சி. 55,400. இதில் மலாயர் 7.9%; மலேஷியர் 4.5%; ஒனர் 17.8% இந்தியர் 78% (இவர்களுள் பெரும்பாலார் தமிழரே): ஐரோப்பியர் 0.9% யூரேஷியர் 0.9% மற்றவர்கள் 0.7% இப்புள்ளி விவரங்களிலிருந்து இன்றும் மலாய் நாட்டில் மூன்ருவது பெரிய இனம் தமிழ் இனமே என்பது தெளிவாகும்.

மலாயரே மலாயா நாட்டுப் பழங்குடியினர் அல்லர். கி. மு. 2000 ஆண்டளவில் யூனுனிலிருந்து (Yunan) sığgı குடியேறிய அம்மக்கள், காலப் போக்கில் மலாய் மண் னில் குடியேறிய பல்வேறு இனத்தவரிடமிருந்து பல்வேறு நாகரிக முறைகளையும் கற்றுக்கொண்டார்கள்.

மலாயா என்ற பெயரிலேயே தமிழ் மணம் கமழக் காணலாம். இப்பெயர் அமைந்த காரணத்தை மலாயாச் சரித்திரம் என்னும் தமிழ் நூலின் ஆசிரியர் டாக்டர் சத்தியானந்தா பின்வருமாறு விளக்கியுள்ளார் :

"மலாயா என்னும் சொல் ஒரு தமிழ்ப் பதமாகும். இந்தப் பெயர் எப்படி உண்டாயிற்று பழைய காலத் திலே முதன்முதலாகக் கிழக்கிந்திய நாடுகளுக்கு வந்து

1. டாக்டர் சுவாமி சத்தியானந்தா-மலாயாச் சரித் திரம், பக்- 14.

2. டாக்டர் சுவாமி சத்தியானந்தா-மலாயாச் சரித் திரம் பக்-21-2.