பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலாய் மொழியில் தமிழ் வழக்குச் சொற்கள் 57

ஆங்காங்கே இராச்சியங்களை நிறுவினவர்கள் தென்னிந் தியாவில் உள்ள கிழக்கு மலைத் தொடரைச் சார்ந்த பிரதேசங்களிலிருந்த தமிழர்களே. இவர்கள் மலைப் பிரதேசங்களிலிருந்து வந்தபடியாலும், மலேஷியா நாடு களில் மலைகள் நிறைந்திருந்தமையாலும், தாங்கள் ஸ்தா பித்த இராச்சியங்களுக்கு மலாயா (மலே) என்னும் பெயரைச் சூட்டினர்கள். இதினின்றே மலாயா, மலேஷியா என்னும் சொற்கள் பிறந்தன. முதன்முதல் மலாயா ஜாதியாருக்கு நாகரிகம் அளித்தவர்கள் தமிழர்களே.'

டாக்டர் சத்தியானந்தாவின் க ரு த் ைத கே ரோலண்டு பிராடெல் (Roland Braddel)என்ற மேலைநாட்டு அறிஞரும் வலியுறுத்தியுள்ளார். அவர் கருத்து வருமாறு: "மலாயாவுலகிற்கு முதன் முதலாக நாகரிகத்தை அளித் தது இந்தியாவே. தென்னுட்டுத் தமிழர்களே பழங் காலத்திலேயே இந்தியாவின் தலை சிறந்த மீகான்களாய் விளங்கிஞர்கள்"

மலாயா என்னும் பெயரிலே தமிழ் மணங் கமழ்வதைப் போன்றே சிங்கப்பூர் என்ற பெயரிலும் செந்தமிழோசையைக் கேட்கலாம். சோழர் குடியில் தோன்றிய நீல உத்தமச் சோழன் என்ற வேந்தனே முதன்முதலாக இத்தீவிற்குச் சிங்கப்பூர்' என்று பெயரிட் டான் என்பர் ஆராய்ச்சியாளர். அதற்குக் காரணம், கி. பி.116-இல் பிந்தாங் தீவை (Rial Island) ஆண்டுவந்த நீல உத்தமச் சோழன் ஒருநாள் தனது பரிவாரத்துடன்

1. டாக்டர் சுவாமி சத்தியானந்தா-மலாயாச் சரித் திரம் பக்-28.

2. டாக்டர் சுவாமி சத்தியானந்தா-மலாவாச் சரித் திரம், பக். 32,77.