பக்கம்:ஆராய்ச்சிக் கட்டுரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

"இருள் என்னும் பொருளுடைய துமாஸ் என்னும் வட சொல்லடியாகப் பிறந்த துமாசிக் என்ற பெயருடைய சிங்கப்பூரை அடைந்தான். சிங்கப்பூர் நதி முகத்துவாரத் தில் இறங்கிய அவ்வேந்தனும், அவன் பரிவாரத்தாரும் சிங்கம் போன்ற ஒரு விலங்கைக் கண்டனர். அதனல் 'துமாசிக் கைச் சிங்கன்பூர் என வழங்கலாயினர். இச் செய்தி பழைய மலாய் வரலாற்றிலும் காணப்படுகிறது.

கி. பி. முதல் நூற்ருண்டு முதற்கொண்டே மலாயா வுக்கும் தமிழகத்திற்கும் இடையே நிலவி வந்த பல துறைத் தொடர்புகள் மலாயாவில் கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டுக்களாலும் கற்கோயில்களாலும் வேறு பல புதைபொருள்களாலும் விளக்கமுறுவது போன்றே, மலாயா மக்களின் பழக்கவழக்கங்களாலும் மொழியா லும் உறுதிபெறுகின்றன.மலாயா நாட்டுப் பெரிய மன்னர் முதல் எளிய குடியானவன் வரை அனைவரும் தமிழகம் வழியாகச் சென்ற இந்திய (பிற்காலத்தில் இஸ்லாமிய) சமயக் கோட்பாடுகட்கும், சடங்குகட்கும், நம்பிக்கைகட் கும் எவ்வாறு இலக்காகியுள்ளனர் என்பதை மேற்கு நாட்டு ஆராய்ச்சி அறிஞர் நூல்களே விரிவாய் விளக்கு கின்றன. சான்ருக, மலாயா நாடும் அதன் வரலாறும்’ என்ற தலைப்பில் சர். ரிச்சர்டு வின்ஸ்டெட்டு என்பவர் வரைந்துள்ள ஆங்கில நூலின் மூன்ருவது இயலைச் சிறப் பாகக் குறிப்பிடலாம். இந்த இயலின் அறிஞர் ரிச்சர்டு வின்ஸ்டெட்டு அரிதின் ஆராய்ந்து கூறும் கருத்துக்களின் சாருக அவர் எழுதியுள்ள பின்வரும் வாசகங்களைக் கூறலாம் :

"இந்தியாவே மலாயா மக்களின் உலகியல் வாழ்க் கையிலும் ஆன்மிக வாழ்க்கையிலும் 19-ம் நூற்ருண்டு

1. Şir Riçhard winstedt—Malaya and its history---pp. 24.32.