பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


பார்ப்பன நரி ஊளையிடுவதை எல்லாம் ‘வேதம்’ போல் கருதிப் பின்பற்றிவரத் தொடங்குகின்றனர். அரசியல் அதிகாரங்களில் உள்ள தமிழர்களுட் சிலருங்கூட அவர் கருத்துரைகளுக்குப் பெருமதிப்புக் காட்டி வருகின்றனர் என்றால் வேறு கூறுவானேன்?

இனி, வாரியாரைப் போலும் ஆரிய அடிமைகள் ஒருபுறம் தமிழர் உருவில் தமிழர்களையும் பிறரையும் கெடுத்துக் கொண்டிருக்க, பூரி சங்கராச்சாரி போன்ற பச்சைப் பார்ப்பன மடத்தலைவர்களும், ஆரிய நச்சுக் கருத்துகளை உதிர்க்கத் தலைப்பட்டுவிட்டனர். தீண்டாமை பற்றியும், இந்துமதக் கோட்பாடுகள் பற்றியும் அவர் அண்மையில் கூறியவை பார்ப்பணியம் இன்னும் அழிந்துபோக வில்லை; உயிர்த்துக் கொண்டுதான் உள்ளது என்பதை நமக்கு நன்கு நினைவூட்டுகின்றன. ‘சாதி’க் கொடுமைகளை இந்நாட்டில் வித்தூன்றிய இந்துமதமும், அதன் அடிப்படைகளான ‘வேத’ ‘புராண’ ‘இதிகாச'க் குப்பைகளும்ம அடியோடு ஒழிந்து போகதவரை, இந்நாடு விடுதலை பெற்றதாகக் கூறிக் கொண்டிருப்பதில் எள்ளத்துணையும் பொருளில்லை. தீண்டாமை என்னும் கொடுமை இன்று நேற்றன்று, கடந்த பன்னூறு ஆண்டுகளாக இந்நாட்டைச் சீர்குலைத்து வருகின்ற கொடிய தொற்றுநோயாகும். அந் நோயின் நச்சுக் காற்றால் துயருற்ற மாந்தரினம் பலகோடி நிலாத் தரையில் மாந்தன் காலடி பதிகின்ற இவ்வறிவியல் காலத்து, இக் குடியரசு நாட்டில் இந்துமதத்தின் தலைவர் என்று விளம்பரப்படுத்தப்பெறும் ஒருவர் தருக்குற மொழிந்த, சட்டத்திற்குப் புறம்பான இம்மொழிகளைக் கேட்டுக் கொண்டு இங்குள்ள அமைச்சர்களும் மக்களும் வாளாவிருக்கின்றனர் என்று சொன்னால், ஒன்றால் அவர்கள் ஆரிய வல்லடிமைகளாக இருத்தல் வேண்டும்; அன்றால் அவர்கள் பெருத்த கோழைகளாக இருத்தல் வேண்டும். குமுகாயக் கொத்தடிமைகள் நிறைந்து விளங்கும் இந்நாடு அரசியல் விடுதலை பெற்றுவிட்டது என்பது எத்துணை இழிவு? எத்துணைப் பேதைமை? இந்துமதப் பூசல்களும் வரணாசிரமப் பாகுபாடுகளும் உள்ளவரை இந்நாட்டில் ஒவ்வொரு குலமும், ஒவ்வொரு கூட்டமும் தனித்தனியான பகையினங்களே.

“வேத காலத்தில் உள்ள ஆரிய ஒழுக்கங்களை அப்படியே இனியும் கடைப்பிடித்து வருவேன்" என்று பேசும் கொழுப்புரை இவ்விந்தியக் குடியரசின்மேல் இட்ட சமட்டியடியாகும்; மக்கள் நாகரிகத்திற்கிட்ட சூளுரையாகும்; உலக ஒற்றுமைக்கு அடிக்கப்பெற்ற சாவுமணியாகும். பார்ப்பனியத்தின் வலிந்த வேற்றுமைக் கைகளால் பரந்துபட்ட மக்களை ஒன்றாக இணைத்துவிடத் துடிக்கும். நடுவணரசின் அறியாமையை என்னென்பது? வாரியார்களும்