பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

107


பூரியார்களும் செல்வ வலிவுற்று இந் நாட்டு மக்களை மடயர்களாகவும், கொடுமையாளர்களாகவும் ஆக்குகின்ற முயற்சி இந்நாட்டின் முன்னேற்றங்கள் அத்தனையையும் தடுத்து நிறுத்தும் பேரணையாகும். இத்தகைய வல்லணைகளை உடைத்துத் தகர்க்காமல் இவ்வரசாட்சியில் சட்டங்களுக்கு ஒரு கேடா? அமைச்சர்களுக்கு ஒரு தேவையா?

‘தீண்டாமையைக் கடைப்பிடிப்பது என் பிறப்புரிமை’ – என்று பேசுமளவிற்கு அவருக்குத் துணிவைக் கொடுத்தவர் யார்? அவர் கடைப்பிடிக்க விரும்பும் தீண்டாமை எத்தகையது? வேதக் காலத்தில் நான்கு வரணத்தார்களும் நான்கு வகையான உடை உடுத்தியிருந்தார்களாமே அத்தகைய வண்ண உடைகளையே பூரியார் உடுக்கச் சொன்னாலும் நாம் வியப்படைவதற்கில்லை. (The Social distinction of Vedic times were those of occupation and of colour (Varna) which implied race, marked also by a difference of dress, white for Brahmins, red for Kshatrias, yellow for Vaisyas and black for Sudras–Short History of India – E.B. Havell)

மநுவினால் கூறப்பெற்ற ஒழுக்கங்களே இனிக் கடைப்பிடிக்கத் தக்கனவாகும் எனப் பூரியார் முழங்குகிறாரா? பொதுவிடங்களில் தீண்டப்படாதாரை நடக்கவிடக் கூடாது என்பது அவர் எண்ணமா? ‘இந்துக்கள்’ நடக்கும் தெருக்களில் வரும் தீண்டப்படாதவர்க்ள் இனிப் பண்டை முறைப்படி கழுத்திலோ மணிக்கட்டிலோ ஒரு கறுப்புக் கயிற்றைக் கட்டிக்கொண்டுதான் வருதல் வேண்டுமா? பண்டையில் (மிகவும் அண்மைக்காலம் வரை) பூனாவில் உள்ள தீண்டப் படாதவர்கள் தாங்கள் தெருவில் நடக்கும்பொழுது எழும்புகின்ற தூசுகள் பட்டு, இந்துக்கள் தீட்டடையாதிருக்கும் பொருட்டு, தங்கள் முதுகுப்புறங்களில் நீண்ட துடைப்பக் கட்டைகளைச் சுமந்து திரிந்தார்களே, அதுபோலவே இனியும் திரியவேண்டும் என்பது பூரியின் கருத்தா? அவர்கள் துப்புகின்ற எச்சில்களை மிதித்துத் தீட்டுப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தங்கள் கழுத்துகளில் எச்சில் படிக்கங்களைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டு. சென்றார்களே, அவ்வகையில்தான் தீண்டப்படாதவர்கள் இனி நடமாடவேண்டும் என்பது பூரிப் பார்ப்பானின் எண்ணமா? இல்லை மது தன் நூலில் கூறியிருப்பது போல், ‘சண்டாளர்கள்’ ‘பிரதிலோமர்கள்’ ஆகிய ‘பாகிய’ சாதியினர் (தீண்டத்தகாதவர்கள்) நகரத்திற்கு வெளியே சுடுகாடு, மரத்தடி, தோப்பு, மலைப்புழை இவற்றில் குடியிருக்க வேண்டுமா? (மநு 10–50) குடவம்(பித்தளை) முதலிய மாழை(உலோக) ஏனங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தாமல்