பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்


(மநு : 10–51) உடைந்த மண்சட்டிகளில்தான் (மநு : 10–52, 54) உண்டுவர வேண்டுமா? பிணத்தின் மேலிட்ட ஆடைகளை அணிந்துகொண்டு (மநு : 10–52) நாய், கழுதை முதலியவற்றைத்தான் வளர்க்க வேண்டுமா? மாடு முதலியவற்றை வீடுகளில் வளர்க்கக் கூடாதா? (மநு : 10–5)

இவை தவிர ஆரியப் பார்ப்பனர்களுக்கு ஏற்றம் தருகின்ற மது நூலின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கச் சொல்கின்றாரா பூரி மடத் தலைவர்? அவ்வாறெனில், “கருவூலம் கொள்ளை போனலும் பிராமணர்க்கு (அரசர்) இடையூறு செய்யக் கூடாது; ஏனெனில் பிராமணரின் வருத்தமும சினமும் அரசனின் படைகளையும் ஊர்திகளையும் அழியச் செய்துவிடும்” (மநு 9–313); “தீய செயல்களுடையவராயினும் பிராமணர்கள் போற்றற்குரியவர்களே” (மநு 9–319); “பூனூல் முதலிய பிராமணர் அடையாளங்களைப் பூணுகின்ற பிறரை அரசன் உறுப்புக் குறைப்பு (அங்கசேதம்) செய்து விட வேண்டும் (மநு : 9–224);” பிராமணர் பிற இனத் தொழிலாளரிடமிருந்து அவர்கள் உடைமைகளை வலிந்து பிடுங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு அப்பொருள்கள் என்றும் உரிமை யுடையன அல்ல” (மநு : 8–415) “பிராமணர்க்குத் தலையை மொட்டை அடிப்பதே உயிர்த்தண்டனை ஆகும்; பிற சாதியார்க்கு உயிரைப் பறித்தே ஆகவேண்டும் (மநு : 8–378); அரசியல் ஒவ்வொரு நாளும் மூன்று வேதங்களையும் ‘தர்ம’ நூல்களையும் கற்றுணர்ந்த பிராமணரின் கருத்துப்படியே நடைபெறவேண்டும் (மநு : 7–37)” என்பவற்றையும் இவை போன்ற பிற ஒருதலையான – கொடுமையான கட்டளைகளையும் அரசினரும் மக்களும் கடைப்பிடித்தொழுகுவதே தக்கது என்பது பூரியாரின் உட்கிடையோ?

பூரி சங்கராச்சாரியின் நினைவில் தீண்டத்தகாதவர்களாகக் கணக்கிடப் பெறுபவர் யார் யார்? வரணாசிரம முறைப்படி சண்டாளனும் (சூத்திரன் ஒருவனுக்கும் பிராமணப் பெண் ஒருத்திக்கும் பிறந்தவன்) க்ஷத்தாவும், (சூத்திரனுக்கு க்ஷத்திரியப் பெண்ணிடத்தில் பிறந்தவன்), அயோகவனும் (சூத்திரனுக்கு வைசியப் பெண்ணிடம் பிறந்தவன்) மேற்கூறிய சண்டாளனும், க்ஷத்தாவும், அயோகவனும் முறையே தந்தம் இனப் பெண்டிரிடத்தும், நால்வரணப் பெண்டிரிடத்தும் பெற்ற பதினைந்து வகையான மக்களும், ஆகப் பதினெட்டுவகைச் சாதியாரே தீண்டப்படாத பாகிய சாதியினர் என்று மது குறிப்பிடுகின்றார். பூரியும் அவர்களைத்தான் தீண்ட மாட்டேன் என்று குறிப்பிடுகின்றாரா? இவர் குறிப்பிடுபவர்களுக்கு என்ன அடையாளங்கள்? பூரி சங்கராச்சாரியின் தாய் இங்குக் குறிப்பிடப்பெற்றிருக்கும் ஓரினத்தானிடமும் அவரைப் பெற்றெடுக்க