பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

145


அவர்கள் இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகளில், தமிழ்மொழியின் அடிப்படைக் கூறுகளே இன்னும் ஆராயப் பெறவில்லை. நம் மொழி வரலாறு பலவாறு திரித்தும் மாற்றியுமே இதுவரை எழுதப்பெற்று வந்துள்ளது. இதைப்பற்றி எவரும் வருந்துவதாகவே தெரியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து வளர்ந்து பல்கிப் பெருகிய நம் தமிழ்மொழி, மிகப் பிந்தித் தோற்றுவிக்கப் பெற்ற, சமசுக்கிருதத்தின் துணையில்லாமல் வாழவே முடியாது என்பதுபோனற் ஒருவகை மயக்கத்தையே இதுவரை வெளியிடப்பெற்ற கருத்துகள் புலப்படுத்துகின்றன. நம் பேராசிரியர்களும், ஆராய்ச்சியறிஞர்களும், உண்மையான வரலாற்றையும் தமிழன் தகுதியையும் வெளிப்படுத்தினால், எங்குப் பார்ப்பனர்களின் துணையும், ஆக்கமும் தமக்குக் கிடைக்காமல் போய்விடுமோ என்று அஞ்சித் தாறுமாறாக ஆரியச் சார்புக் கருத்துகளையே வலியுறுத்திப் பேசியும் எழுதியும் வருகின்றனர். தொழில் வல்லுநர் நா. மகாலிங்கம், கல்வி வள்ளல் முத்தையாச் செட்டியார் போன்ற பெருஞ்செல்வர்களும், கம்பராமாயணம் போன்ற தமிழடிமை இலக்கியங்களுக்கு, தமிழரை அடிமைப்படுத்தும் சமய புராணச் சொற்பொழிவுகளுக்கும் அள்ளித் தருகின்ற ஆக்கத்தையும் ஊக்கத்தையும் போல், தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பேரளவில் உதவுவதில்லை. தம்மைப் பெரிய எழுத்தாளர்கள், பாவலர்கள், கதையாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள், பேச்சாளர்கள் என்று கூறிப் பெருமை பேசிக் கொள்ளும் தமிழர்களும், பெரும் புளுகர்களாகவும், வரலாறு அறியாதவர்களாகவும், மொழிப் பற்றற்றவர்களாகவும், மதப் பித்தர்களாகவும், சாதி வெறியர்களாகவும், கட்சியார்வலர்களாகவும், ஆரிய அடிமைகளாகவுமே இருக்கின்றார்களே யொழிய, ஒரு சிறிதேனும் தன்மானம் உள்ளவர்களாகவோ, தங்கள் இனத்துக் குற்ற இழிவு துடைப்பவர்களாகவோ, தமிழ்மொழி வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாகவோ, தமிழின முன்னேற்றத்திற்கு உழைப்பவர்களாகவோ தெரியவில்லை. அவர்கள்தம் வாய்க்கும் வயிற்றுக்கும், பெண்டு பிள்ளைகளுக்குமாகவே உழைத்துப் பொருள் திரட்டப் புறப்பட்டுவிட்டவர்கள் போலவே, செயல்பட்டு வருகின்றார்கள். அவர்களிடத்து உண்மையான தமிழ் ஆராய்ச்சியையும், மொழி ஆராய்ச்சியையும், இன அடிமை நீக்கத்தையும் பற்றிச் சொன்னால், அவர்கள் அவற்றை வெறும் கற்பனையென்றும், வெறியென்றும் குறுகிய மனப்பான்மை என்றுமே கூறி, நம்மை ஒதுக்கியும் புறக்கணித்தும் விடுவதோடு, நம் கருத்துகளுக்கும் ஆக்கங்களுக்கும் என்றுமே எள்ளத்துணையும் துணைநில்லாததுடன்,