பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

147


வித்யா பீடத்’தில், மாதத்திற்கு மாணவன் ஒருவனுக்கு உரு. 250 வரை உதவித்தொகை கொடுக்கப்பெற்று, சமசுக்கிருத மொழியும், வேத புராணங்களும் கற்பிக்கப் பெற்று வருகின்றன. ‘வேத விற்பன்னர்கள்’ ஊக்குவிப்புத் திட்டத்தை நடுவணரசு அமைத்து, ஆண்டுதோறும் பேரளவில் அவர்களுக்கு உதவி தந்து வருகின்றது. சமசுக்கிருத மொழி ஆங்கிலம் போல உலக மொழியென்று நடுவணரசு பாராட்டி, அனைத்திந்திய அடிப்படையில் சமசுக்கிருதத்தின் வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்துவருகின்றது. பூனாவில் உள்ள ‘தெக்கான்’ கல்லூரி, அதன் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் எசு.எம். காத்துரே அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, 15 முதல் 20 தொகுதிகள் வரை, சமசுக்கிருதப் பேரகர முதலியொன்றை வெளியிடவும், அதற்கென ஒரு கோடி உருபா வரை செலவிடவும் திட்டமிட்டுக் கொண்டு, செயல்பட்டு வருகின்றது. அத் தொகுதி ஒவ்வொன்றும் ஒராயிரம் பக்கம் இருக்குமாம். 1986இல் அவ்வகர முதலி வேலை முடியுமாம். அதற்குத் தேவைப்படும் எல்லா உதவிகளையும் நேரடியாக நடுவணரசும் மகாராட்டிர அரசும், நடுவண் அரசுச் சார்புள்ள பல்கலைக் கழக நல்கைக் குழுவும், பூனா பல்கலைக் கழகமும் – செய்ய உறுதி பூண்டுள்ளன. இவையல்லாமல் உலக ஒன்றிப்புக் கழகத்தின் (U.N.O) கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஆண்டொன்றுக்கு 3,000 தாலர் (ஏறத்தாழ 22,000 உரு) அப் பணி முடியும் வரை தந்து உதவ ஒப்புக்கொண்டுள்ளது. இவ் வொப்புதலும் நடுவணரசு தலையீட்டின் மேல்தான் கிடைக்கும் என்பதையும் நம்மவர்கள் அறிந்துகொள்ளுதல் வேண்டும். இவ்வுதவி யின்றி உலக ஒன்றிப்புக் கழகத்தின் வேறுவகை உதவிகளும் நடுவண் அரசின் பரிந்துரையால் ஆண்டுதோறும் சமசுக்கிருத வளர்ச்சிக்குக் கிடைத்துவருகின்றது. அவ்வுதவித் தொகையைக் கொண்டு, சமசுக்கிருத மொழிக் கழகங்களும், வேதப் பள்ளிகளும், ஆரியமத நிறுவனங்களும், சமசுக்கிருதப் புலவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் பேணப்பெற்றும், புரக்கப்பெற்றும், காக்கப்பெற்றும் வருகின்றார்கள். மற்றும், 1972இல் தில்லியில் நடந்த அகில பாரத வேத வித்வத் சம்மேளனத்தில் இவ்விந்திய நாட்டின் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி கலந்துகொண்டு, அங்குக் கூடிய சமசுக்கிருதப் பேரறிஞர்களையும், ‘வேத விற்பன்னர்’களையும் ஊக்கப் படுத்தியதுடன், அம் மாநாட்டுத் தீர்மானத்தில், அவர்களைப் புரப்பதற்காக நடுவணரசிடம் ஆண்டுதோறும் உதவுமாறு கேட்கப் பெற்றதற்கேற்ப உருபா பத்து இலக்கத்தையும் கிடைக்க ஏற்பாடும் செய்தார். அக்கால் கல்வியமைச்சராக விருந்த திரு. கரன்சிங்