பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

169


பெறுகிற மொழி என்னும் பொருளில் தேவ பாஷை என்று பெருமைப்படுத்திப் பேசினர். பிரம்மசிரி மருவூர் கணேச சாத்திரியார் என்பவர் எழுதியுள்ள 'வேத மதம் அல்லது வேதாகம இதிகாஸ் புராண ரகஸ்ய நிரூபணம்' என்னும் நூலில் (பக்கம் 194–195) கீழ்வருமாறு எழுதுவதை அன்பர்கள் கவனிப்பார்களாக.

“சிலர் நமது முன்னோர் குடும்பங்களில் ஸம்ஸ்கிருத பாஷை தேச பாஷையாக பூர்வகாலத்தில் வழங்கி வந்ததெனவும், அந்த பாஷை இப்போது செத்த பாஷையாகப் போய்விட்டது எனவும் தற்காலம் சொல்லுகின்றனர். இவ்வுலகில் ஸம்ஸ்கிருத பாஷை ஒரு ஸ்மயமும் தேச பாஷையாக வழங்கப்பட்டதில்லை. கற்றோர்கள் கூட்டங்களில் மாத்திரம் வழங்கப்பட்டதேயன்றி வேறு எவ்விதமுமல்ல. இவ்வுண்மை தெரியாமல் தாறுமாறாய் வசனிக்கும் விஷயங்கள் தற்காலம் விசேஷமாயிருக்கின்றமையால், ஏதோ அவ் விஷயத்தையும் இங்கு நாம் குறிக்க வேண்டியதாயிற்று. ஸம்ஸ்கிருத பாஷை யுண்ணிய புவனங்களாகிய ஸூவர்வோகம், மஹாலோகம், கைலாசம் – முதலிய இடங்களில் வழங்கும் பாஷையேயன்றிப் பூலோக தேச பாஷையல்ல. தென்தேசத்திலிருந்த நம்முடைய முன்னோர்கள் எப்போதும் தென்மொழியையே பேசும் பாஷையாக வழங்கி வந்தனரே பன்றி வேறு எந்த பாஷையும் பேசியவர்களல்லர். ஆனது பற்றியே மகாபாரத்தில் அர்ஜூனனது தீர்த்தயாத்ரா ப்ரகரணத்தில் 'மணலூர்புரே' எனும் சொல்லிலும் ஸ்கந்த புராணத்தில் 'பெண்ணாநல்லூர்' எனும் சொல்லிலும் தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தி யிருப்பதனாலும், இவ்வாறே மற்ற சிவரஹஸ்யாதி நூல்களிலும் நகர, கிராம ஜனங்களின் பெயர்களை வழங்கும் ஸந்தப்பங்களில் தென்மொழியே பல இடங்களில் வழங்கப்பட்டிருப்பதினாலும் தென் தேசத்தில் தமிழ் மொழியே தேச பாஷையாக வழங்கி வந்ததென வெளிப்படையாகத் தெரிகின்றது. இவ்வுலகில் இவ்வாறு தேச பாஷைகள் வழங்குவது போல் தேவ உலகில் வழங்கும் பாஷை ஸம்ஸ்கிருதமே”

எனவே, அவர்கள் கூற்றுப்படியே சமசுக்கிருதம் தேவருகலத்தில் வழங்கி வரும் மொழியாக இருக்கிறதென்றால், இங்கு, இந்தத் தமிழ்நாட்டில், அல்லது இந்தியாவில்தான் அதற்கென்ன வேலை! இதற்குப் போய் ஏன் தீபம் பார்த்தசாரதியார் அலட்டிக் கொள்கிறார். அவ்வாறு அலட்டிக் கொள்வது அவர் அறிவன்று அவர் போட்டிருக்கும் பூணூல். தமிழ் பேசும் ஒரு பெரிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு கூட்டத்தினரைச் சூத்திரர் என்றும்,