பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

219

இதற்கடுத்து, இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும் 5000 பேர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முறையான சமசுக்கிருத மொழிப் பயிற்சி கொடுத்து, அவர்களைக்கொண்டு உலக முழுவதும் சமசுக்கிருதப் பள்ளிகளைத் தோற்றுவிப்பது அவர்கள் திட்டமாகும். இவ்விரண்டு திட்டங்களும் 1983 இறுதிக்குள் செயற்படுத்தப் பெறுதல் வேண்டும் என்னும் பெருமுயற்சியில் அவர்கள் முனைந்திருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், தமிழர்கள் ஒன்றை ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பார்ப்பனர்கள், அவர்களின், மொழி வளர்ச்சிக்கும் இன முன்னேற்றத்திற்கும் திட்டமிட்டுச் செயற்படுவதும், பணம் திரட்டுவதும் நமக்கு எரிச்சலையும், கொதிப்பையும் ஏற்படுத்துவதை விட, ஒர் உண்மையை உணர்த்துகிறது. அவர்கள் இனத்திற்கு அவர்கள் பாடுபடுவதில் தவறென்ன? ஆனால், நாம் எப்படி யிருக்கிறோம்? நம்மிடம் தமிழ்ப் பற்று உண்டா ? தமிழ் வளர்ச்சிக்கான திட்டம் உண்டா? நம்மிடத்தில் உள்ள செல்வர்கள் நாம் அந்த முயற்சியை செய்வதற்கு உதவுகிறார்களா? நம் தலைவர்களும் இவற்றைப் பற்றிக் கவலை கொள்கிறார்களா? சிந்திக்க வேண்டும், நாம்!

- தமிழ்நிலம், இதழ் எண் : 11, 1983