பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘ஆன்மீகம்’ - என்பது என்ன? அதன் செயல்வரம்பு எது? வீரப்பன் விளக்க முடியுமா?

ண்மையில் சென்னையில் நடந்த ஒர் 'ஆன்மீக' மாநாட்டில் அமைச்சர் வீரப்பன் கலந்துகொண்டு, ஆன்மீகம் என்னும் பெயரில் அறிவியல், பகுத்தறிவு, சீர்திருத்தம் ஆகியவை பற்றித் தம் அறியாமையும், பகுத்தறிவின்மையும், மூடத்தனமும் தெளிவாக விளங்கும்படி, ஏதேதோ உளறிக் கொட்டியிருக்கிறார். அவருக்கு இது வேண்டாத வேலை. அறநிலையத்துறை அமைச்சர் என்றால், மூட நம்பிக்கைகளுக்குத் துணைபோக வேண்டும் என்பது பொருளன்று; கொள்கையும் அன்று.

நம் நாட்டில் இன்று புழக்கத்தில் உள்ள இந்துமதம், சமணமதம், புத்தமதம், இசுலாம் மதம், கிறித்தவ மதம் முதலிய மதநெறிகளில் ஆன்மீகநெறி உடைய மதம் என்பது எது என்பதை அவர் விளக்க முடியுமா? எல்லா மதங்களிலும் உள்ள 'கடவுள் கோட்பாட்டை'யே ‘ஆன்மீக’ நெறி என்று வீரப்பன் கூற முன்வருவாரானால், அம் மதங்கள் தம்முள் எதற்காக முரண்பட்டுக்கொண்டு, ஒன்றையொன்று அழிக்கவும் பழிக்கவும் தாழ்த்தவும் வீழ்த்தவும் முயற்சிசெய்ய வேண்டும்? இனி, மேற்கூறிய மதங்கள் தவிர, இங்குள்ள சித்தநெறி, வேதநெறி, வள்ளலார் நெறி என்பவை யெல்லாங்கூட ‘ஆன்மீக’க் கருத்தையே கூறுகின்றன என்றால், அவையும் ஒன்றுக்கொன்று நேர் எதிரான கருத்துகளைக் கொண்டிருப்பது ஏன்? இருமைக் கொள்கையும் (துவைதம்), இரண்டன்மைக் கொள்கையும் (அத்துவைதம்), ஒருமை இருமைக்