பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்திரா காந்தியின் சாம்பல்(அஸ்தி) மற்றப் பொருள்களின் சாம்பலைப் போன்றதே!

றிவியலின் முன் அதற்கென்று தனிச்சிறப்போ, பெருமையோ, தனிக் குணநலன்களோ இல்லை!

அரசு இந்துமத அடிப்படையில் அதை ஊர்ஊராக எடுத்துச்சென்று, மக்களின் வணக்கத்திற்கு வைத்து மக்களின் ஏராளமான வரிப்பணத்தை வீணாக்கியது தவறு!

அறியாமையும் மூடநம்பிக்கையும் ஏழைமையும் நிறைந்த நாட்டில் அரசே இப்படிச் செய்வது பொதுமக்களை ஏமாற்றுவதாகும்! ஆளும் கட்சிக்கு வலிவு தேடுவதாகும்!

இக்கொடுமைச் செயலை அறமன்றம் தடுத்து நிறுத்த வேண்டும்!

நடுவண், மாநில அரசுகளை எதிர்த்துச் சென்னை உயர்நெறி மன்றத்தில் பாவலரேறு முறைவழக்குத்(ரிட்) தொடுத்தார்!

வரலாற்றிலேயே முதல் முறையாக உயர்நெறிமன்றத்தில் இனிய, தூய தமிழில் தாமே வழக்காடினார் பாவலரேறு!