பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இந்துமதம் தமிழர் மதமா?


ந்துமதம் என்று இக்கால் கூறப்பெற்று வருவது உண்மையாக ஒரு தனி மதமே இல்லை. ஆரியரின் வேதமதமே; அஃதாவது வைதீக மதமே. அண்டை அயல் கடவுள் கொள்கைகளை உட்கவர்தல் செய்து கொண்டு, இந்துமதம் என்னும் பெயரில், நம் மொழி, இனம், பண்பாடு, கலை, மெய்ப்பொருள் கொள்கை - முதலிய அனைத்துக் கூறுகளையும் அழித்துக்கொண்டுள்ளது.


நம் மறைமலையடிகளாரும், பாவாணரும் தமிழின மெய் வரலாறு கூறிய பேராசிரியர் பிறரும் தமிழர் மதங்களாகக் கூறுகின்ற சிவனியமும்(சைவமும்), மாலியமும் (வைணவமும்)கூடத் துய தமிழர் மதங்கள் என்று சொல்லிவிடுகின்றபடி இன்றில்லை. இன்றுள்ள தமிழ்மொழி எவ்வாறு கலப்புற்றும், சமசுக்கிருதம் எவ்வாறு தமிழ் மொழியைத் தன்னுள் பெரும்பகுதி கரைத்துக்கொண்டும் உள்ளனவோ, அவ்வாறே தமிழரின் மதங்கள் என்று கூறுகின்ற சிவனியமும், மாலியமும், ஆரியக் கலப்புற்றும், ஆரியரின் மதமான வேத(வைதீக) மதம் அவற்றைத் தன்னுள் கரைத்துக்கொண்டும் திக்கு திசை தெரியாமல் மயங்கிக் கிடக்கின்றன.


தூயதமிழ் முயற்சி போல், தூயமத முயற்சியும் தமிழர் இனிமேல் தான் செய்ய வேண்டும். அதற்கு முன் நமக்கு ஒரு மதம் தேவையா என்பதை முடிவு செய்துகொள்வது நல்லது.

இந்துமதம் தமிழினத்தைச் சிதைக்கின்றதா?
ஆமாம் என்றால் எப்படி?


இந்துமதம் தமிழினத்தை ஏற்கனவே பெரும்பகுதி சிதைத்து அழித்து விட்டது. எஞ்சியுள்ள சில கூறுகளைத் தாம் நாம் இன்று