பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மதம் ஆட்சிக்கட்டிலில் ஏறினால் ஆட்சி இருண்டுவிடும்! எச்சரிக்கை!

ந்தியத் தலைமை யமைச்சர் இராசீவ் அண்மையில் தமிழ்நாடு வந்தபொழுது குருவாயூர்க் கோயிலுக்குப் போய்த் தம் எடைக்கு எடை சருக்கரை அளந்து துலைபாரம் நிறுத்த வழிபட்டார். பின் சென்னை வந்தபொழுது, காஞ்சி சென்று மூன்று சங்கராச்சாரிகளையும் வழிபட்டுச் சென்றார்.

வேறு வகையிலெல்லாம் அவரைக் குறைகறிய பார்ப்பனர்கள், இராசீவின் இந்தச் செய்கைகளால், உச்சி குளிர்ந்து போயினர். மதச்சார்பு ஒன்றே பார்ப்பனத் தன்மையை உறுதிப்படுத்துவது என்பது அவர்களின் கணிப்பு. ஒருவன் எத்துணைக் கொடியவனாக, கயவனாக, அதிகார வெறிபிடித்த கொடுங்கோலனாக இருந்தாலும், அவன் பார்ப்பன (இந்து) மதத்தை மதிக்கின்றான் என்றால், பார்ப்பன இனம் அவனை மன்னித்துவிடும்; பேணிக் கொள்ளும்; கட்டிக்காத்து நிற்கும். எனவே இராசீவ் இந்த வகையால் அல்லது