பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

யாரைக் கொண்டு வீழ்த்துவது என்பது பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. யாரை வீழ்த்துவது என்பது பற்றித்தான் அவர்கள் கவலை கொள்வதெல்லாம். அவர்களிடம் என்றுமே மாறாத இச் சாணக்கிய நிலை மிகக் கொடியது. பார்ப்பனர்கள், தாமே வாழ வேண்டும் என்னும் தாந்தின்னி நிலையினின்று மாறி, இக் காலத்திற் கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவில்லையானால், எதிர்காலம் அவர்களுக்கு அழிவை நோக்கியதாகவே இருக்கும். ஏனெனில் மாந்தவியல் உரிமை வளர்ச்சி மிக்கோங்கித் தழைத்து வளர்ந்து வரும் காலம் இது.

இனி, வி.பி. சிங்கைத் தலைகுப்புற வீழ்த்திவிட்டு, அரசியல் கரவடர்களின் துணையுடன், குழப்ப ஆட்சி அமைத்துள்ள சந்திரசேகரர் போலும் மக்கள்நலம் கருதுவதாகக் கூறிக் கொள்ளும் சமநிலை உணர்வாளர்கள். தங்களுக்கு எதிரிகளாக உள்ளளவர்கள் யார் என்பதைச் சரியாக அடையாளங் கண்டு கொள்ள வேண்டும் இந்துமதப் பார்ப்பனீய வெறியர்களாக உள்ள அத்துவானியும் வாச்சுபேயும் வி.பி. சிங்கை முன்பு விரும்பியவர்கள்தாம்! அவர் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தவர்கள்தாம்! பின், ஏன் அவர்கள் ஆதரவைப் பின்வாங்கிக் கொண்டார்கள் என்பதைச் சந்திரசேகரர் அறியாதவரல்லர் ஆட்சி நலத்தைவிட மக்கள் நலத்தைவிட, பார்ப்பனீய நலந்தான் பார்ப்பனர்களுக்கு முகாமையானது. அரசியலில் பார்ப்பனிய ஆளுமைக்கும், மதத்தில் இந்துமதத்திற்கும், மொழியில் சமசுக்கிருதத்திற்குகம் அல்லது இந்திக்கும், எங்கு எங்கு தாழ்ச்சி ஏற்படுகின்றதோ, எவர் எவர் தாழ்ச்சி செய்கின்றார்களோ அங்கெங்கு, அவரவரை வீழ்த்திப் பார்ப்பனியத்தையும் இந்துமதத்தையும் நிலைநாட்டுவதுதான் பார்ப்பனர்களின் நோக்கம், குறிக்கோள், வாழ்க்கை எல்லாம்!

எனவே, சந்திரசேகரானாலும் சரி, தேவிலால் ஆனாலும் சரி, வேறு எந்த முலாயம் சிங் யாதவ் ஆனாலும் சரி, பார்ப்பனியத்திற்கு ஆக்கம் தருவதானால் இந்திய ஆட்சி அதிகாரத்தில் நிலைக்க வைக்கப் பெறுவார்கள். இல்லெனில் எவ்வாறேனும் வீழ்த்தப்பெறுவார்கள். இதுதான் இந்திய அரசியல்! இதுதான் இந்து மதம்! இதுதான் பார்ப்பணியம். இதனைச் சந்திரசேகரர் விரைவில் விளங்கிக் கொள்ளும் நேரம் வரும். எனவே ஆட்சி மாற்றமும் வழக்கம் போல் விரைவில் இருக்கும்!

- தமிழ்நிலம், இதழ் எண் : 141-142 1990