பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
செயலலிதாவே தமிழினத்திற்கு வாய்த்த கடைசி ஆரிய எதிரி!
வாழப்பாடியே கடைசி வீடணன்!
இனிமேல் இத்தகையவர்களைத் தமிழர்கள் தோன்றாமல் செய்யவேண்டும்!

அடுத்த தேர்தல் போராட்டம் தமிழினத்தின் உரிமைப் போராட்டமாக முகிழ்க்க வேண்டும்!

பாவலரேறுவின் வரலாற்றுக் கணிப்பு இது!

(இவ்வுரை இராசீவின் மறைவுக்கு முன்னர் எழுதப் பெற்றது.)

டுத் தெருவில் விழுந்த தேங்காயை நாய்கள் உருட்டிக் கொண்டு அலைக்கழிப்பதைப் போல் இந்திய அரசாட்சி அல்லோலப் பட்டுக் கிடக்கிறது.

வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?”

- என்று பாவேந்தர் பாடினார். இந்திய அரசியலும் இவ்வாறுதான் ‘மகராசர்கள்’ எனப்படும், இனத்தலைவர்களாகத் தங்களை மதிப்பிட்டுக் கொள்ளும் பார்ப்பனர்களிடமும், அவர்களின் பகடைக் காய்களாக உருட்டப்படும் ‘பனியாக்கள்’ என்று கூறப்பெறும் வடநாட்டு வணிகர்களிடமும் சிக்கிச்