பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

சீரழிந்துகொண்டு வருகிறது. கன்னக்கோல் எடுத்தவனெல்லாம் இன்று கட்சி தொடங்கித் தலைவன் என்று உலா வந்து கொண்டிருக்கின்றான். திரையில் நடிக்க வந்தவர்களெல்லாரும் இன்று அரசியலிலும் நடித்து அதைவிடப் பணம் பெருக்கத் தொடங்கிவிட்டார்கள்.

மாநில ஆட்சிகளை அப்படி இப்படி உருட்டி எடுத்துவிட்டு, அலங்கோலத் தேர்தலை நடத்த ஆள்வோர்கள் முடிவு செய்துவிட்டார்கள். இந்திய மக்களுக்குத் தேர்தல் என்பதும், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள நூற்றுக் கணக்கான மதவிழாக்களைப் போலத் தான் கருதப்பெறுகிறது.

குடியரசாட்சியில் மக்கள் ஆட்சியறிவு பெறவில்லையானால், ஏற்படும் எந்த ஆட்சியும் இருக்கும் என்பதற்கு இந்திய அரசின் கடந்த நாற்பதாண்டுக் கால வரலாறே அழிக்க முடியாத ஒரு சான்றாக இருக்கிறது. இந்தியா தன்னுரிமை பெற்ற பின் இங்கு அமைந்துள்ள ஆட்சிகள் அத்தனையுமே ஊழலும், கொடுங்கோன்மையும் நிறைந்தவைதாம் என்பதில் ஐயமே இல்லை. இந்திய மக்கள் விடுதலை பெற்ற மற்ற எல்லா நாட்டு மக்களையும் விடப் பிந்திய மக்களாகத் தாம் இருக்கின்றனர்.

இந்தியா அரசியலிலும் சரி, பொருளியலிலும் சரி, மற்ற நாடுகளைவிட முன்னேறாமைக்குப் பல கோணங்கள் உள. அவற்றுள் முகாமையானவை - இங்குள்ள மதங்களும் சாதிகளுந்தாம். வேறு நாடுகளிலும் மதங்களும், சாதிகளும் இங்கிருப்பன போல் இல்லாமற் போயினும், வேறுவகையான இன, நிற வேறுபாடுகளும் இருக்கத் தான் செய்கின்றன. ஆனாலும் இங்கு இருப்பது போல் பார்ப்பனீய மேலாளுமை இல்லை. மக்களை இந்த அளவில் மேல் கீழென்றும் உயர்வு தாழ்வென்றும் பிரிக்கின்ற வருணாசிரம, சாதிப் பிரிவுகள் இல்லை. எனவேதான் இங்குள்ள உயர்நிலையிலுள்ள சிறுபான்மை மக்களைத் தவிரப் பிற பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கு நடுவணரசு போடும் திட்டங்கள் சட்டங்கள் எதுவும் ஒரு பயனும் தருவதில்லை. இதைப் பற்றி யெல்லாம் ஆட்சிக்கு வரும் எந்த அரசியல் கட்சியும் கவலைப்படுவதுமில்லை. அவ்வாறு கவலைப்படும் ஒரிரண்டு கட்சிகளையும் இங்குள்ள பார்ப்பனர்களும் முதலாளிகளும் தொடர்ந்து ஆட்சி நடத்த விடுவதும் இல்லை. அத்தகைய நடுவணரசும் மாநில அரசுகளும் விரைவில் கவிழ்க்கப்பட்டு விடுகின்றன. இதுபோல், இந்நாடு உரிமை பெற்றதிலிருந்து