பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

285


கொண்டிருந்த ஒன்றைச் செயலலிதா, தம் திரைப்படப் பகட்டு விளம்பர அரசியல் உத்தியாக மாற்றினார்.

புராண மூட நம்பிக்கை நிகழ்ச்சி. வரலாற்று நிகழ்ச்சி யென்று மகுடம் சூட்டி விளம்பரம் செய்யப்பெறுகிறது.

அறிவியல் வளர்ச்சி மிக்கோங்கி, வான்வெளியிலேயே போய்க் குடியிருக்கின்ற அளவுக்கு முன்னேறியுள்ள நிலையில்,

புண்ணிய ஆறுகள் ஒன்பதும் பெண்களாக வடிவெடுத்து கும்பகோணம் மாமகக் குளத்தில் வந்து நீராடுகின்றன என்றும், அந்த நாளில் அந்த நேரத்தில் வந்து நீராடுபவர்களுக்கு அவை - அந்தக் கன்னிப் பெண்கள் - அருள்புரிவார்கள் என்றுறம் ஆட்சியாளர்களே மக்களிடையில், மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு விளம்பரம் செய்கிறார்கள் என்றால், இதற்கு எங்கே போய் முட்டிக் கொள்வது? எவரிடம் போய் ஞாயம் கேட்பது? ஏமாற்றுபவர்கள் ஆட்சியில் இளித்த வாயர்கள் நாட்டில் : வேறெப்படித்தான் நிகழ்ச்சிகள் நடக்கும்?

இந்தப் புளுகுகளுக்கெல்லாம் ஓர் அளவே இல்லையா?

“பிரம்மா உலகத்தில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் ஒரு மண்கலயத்தில் வைத்துப் பூசை செய்தாராம். அப்போது சிவன் ஓர் அம்பு எய்து அக் கலயத்தை உடைத்தாராம். அப்பொழுது கலயத்தில் உள்ள அமிழ்தம் நான்கு புறங்களிலும் சிதறுகிறதாம். அது ஒரு புறத்தில் குவிகிறதாம். அந்த இடந்தான் கும்பகோணமாம். அந்தப் பொருள்தான் மாமகக் குளமாம்.”

இஃதென்ன ஏமாற்றுத்தனம் மூட நம்பிக்கை ! இஃது இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சிக் காலமா? புராண, இதிகாசக் காலமா? இஃது எவ்வளவு வெளிப்படையான கயமைத்தனம்! ஒர் அரசே மக்களை இப்படி ஏமாற்றி அவர்களை மூட நம்பிக்கைக்கு உள்ளாக்கலாமா?

இனி, அடுத்த விளம்பரத்தைப் பாருங்கள்! பார்ப்பன மருத்துவர்கள் சிலர் கூடி, மூன்று காஞ்சிப் பச்சைப் பார்ப்பனர்களின் படங்களைப் போட்டு, இம் மருத்துவர்களின் முயற்சி மனித சக்தியின் முயற்சியாம்; அந்தக் காஞ்சி காமகோடி ஊசைப் பார்ப்பனர்கள் தெய்வ சக்தியின் அருளாசி தருகிறார்களாம். என்ன கொடுமை! நன்றாகப் படித்து மருத்துவப் பட்டம் பெற்ற மடயர்கள் இப்படி நெஞ்சாரப் பொய்கூறி மக்களைப் பட்டப்பகலில் ஏமாற்றுகிறார்கள்.