பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

அவன் முன்னுக்கு வரமுடியும்; அப்பொழுதுதான் அவனை அவர்களுடைய தாளிகைகள் புகழும்; வானொலிகள் இடந்தரும்; நாடக மேடைகள், திரை மேடைகள் அவனுக்கு வழிவிடும். இல்லெனில் அங்கங்கே அவனுக்குத் தாழிடப்படும்.

திரைப்பாட்டாசிரியர் கண்ணதாசன், தி.மு.க.வினின்று விலகி அவர்களைத் தழுவிக்கொண்ட பின்னரும், ஏ.பி. நாகராசன் அவர்களின் புராணக் கருத்துக் கதைகளையே தொடர்ந்து படமெடுத்த பின்னரும், நாடக நடிகர் மனோகர் அவர்களைச் சார்ந்து அரங்கேற்றின பிறகும், திருவாட்டி இசைப்பேரரசி எம்.எசு. சுப்புலட்சுமி அவர்கள் இனமாகவே மாறிய பிறகுந்தான் அவர்களைப் பார்ப்பனர்கள் வானளாவப் புகழத் தொடங்கினர். ம.கோ. இராமச்சந்திரனை இராசாசி வாழ்த்திய பின்னரே பார்ப்பனர் இதழ்கள் அவருக்கு விளம்பரங்கள் கொடுத்தன. அவர்களின் இனத்தில் ஒரு சிறுவனோ சிறுமியோ கலையுலகத்தில் கால் வைத்தாலும் சரி, அவர்களைப் பற்றி அவர்களின் இதழ்கள் எழுதுகின்ற பாராட்டுரைகளும், புகழ்ச்சி மாலைகளும், நம் இனத்தவரின் மிகச் சிறந்த கலைஞர் ஒருவருக்குக் கூடக் கிடைப்பதில்லை. இவ்வாறு கலைத்துறையும் வானொலித்துறையும் பார்ப்பனரின் அனைத்ததிகார வல்லாண்மையின் கீழ், நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்யப்படும் அவர்களின் சூழ்ச்சிக்கிடையில் சிக்குண்டு ஆட்பட்டிருப்பதைப் பார்த்தால், தமிழர்கள் இனி எதிர்காலக் கலையுலகத்தில் இடம்பெறுவார்களா?, பெற்றால் முன்னுக்கு வருவார்களா என்று எண்ணவே அச்சமாகவிருக்கின்றது.

நூல் வெளியீடுகளிலும் பார்ப்பனர்கள் நுழைந்து குழப்பாமல் இல்லை. செய்தித்தாள் துறையில் இவர்கள் எப்படி உள்ளே புகுந்து குட்டை குழப்புகின்றனரோ, அப்படியே நூல் வெளியீட்டுத் துறையிலும் மிக மும்முரமாக ஈடுபட்டுத் தம் பழைய வேத, புராண, இதிகாசங்களுக்கே மிகுந்த விளம்பரங்களைச் செய்து வருகின்றனர். பொதுவாகவே இவர்கள் எழுதுகின்ற தமிழ்நடையோ கருத்துகளை வெளிப்படுத்தும் முறையோ தனி அந்நடையைக் கொண்டே கருத்துகளை வெளிப்படுத்தும் முறையைக் கொண்டே இவர்களின் உட்கிடையை உணர்ந்துகொள்ளலாம்.

‘காவிரித் தண்ணிர்’ என்று இவர்கள் எழுதுவதே இல்லை. ‘காவிரி ஜலம்’ என்றுதான் தினமணி எழுதும். அண்மையில் தினமணியில் பொங்கல் திருவிழா மகர சங்கராந்தி என்றே