பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

வாய்ப்புகளை அவர்கள் வலிய ஏற்படுத்திக்கொண்டு, மக்களை எந்த அளவில் என்றென்றும் மடயர்களாகவே, தங்கள் நல்வாழ்வுக்குத் துணை போகின்றவர்களாகவே மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை நம் மக்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டும் என்பதுதான். சொல்வதைச் சொன்னால் கேட்பாருக்குக் கொஞ்சமேனும் மதி இருக்கத்தான் செய்யும். அவர்கள் சொல்லுவதைக் கொஞ்சம் கவனித்தால் போதும்; எந்த நோக்கத்தில் அவர்கள் சொல்லுகின்றார்கள். எந்த நோக்கத்திற்காகச் சொல்கின்றார்கள் என்பனவெல்லாம் விளங்கிக்கொள்ள முடியும்.

தமிழர்களுக்கு இழிந்த பெயர்கள்!

‘துக்ளக்’ இராமசாமி எழுதி வரும் வாசிங்கடனில் நல்லதம்பி எனும் தொடர்கதையில் வரும் கதைத்தலைவனாக இப்பொழுதுள்ள முதலமைச்சரைத்தான் கிண்டல் செய்து எழுதுகின்றார் என்பது எல்லாருக்குமே வெளிப்படையாகத் தெரியும். அதைப் பற்றிய ஆய்வுகள் இருக்கட்டும். ஆனால் அதில் நல்லதம்பிக்குத் துணையாக வருபவர்களின் பெயர்களையும் அவர்கள் பேசிக் கொள்கின்ற தமிழ் (!) உரையாடல்களையும் பார்த்தாலே ‘சோ’ என்னும் இருபதாம் நூற்றாண்டுப் பார்ப்பானுக்குத் தமிழினத்தின் மேல் எவ்வளவு எரிச்சல் – வெறுப்பு இருப்பதைக் கண்டுகொள்ளலாம். நல்ல தம்பியின் நண்பன் பிசாசு, முக்கண்ணனாம்! இன்னொருவன் உலக்கைக் கொழுந்தாம். எப்படி! வேடிக்கைக்காக இப்படி எழுதுவதாகக் கூறிக்கொண்டு தமிழ் மக்களை இழிவுபடுத்துவதும் தமிழ் மொழியைத் தாழ்த்துவதுந்தான் ‘துக்ளக்’கின் நோக்கம். தனக்கு நேர் எதிரிடையான ஓர் இன அரசனின் பெயரைத் தனக்கே உரிய ‘கிண்டல்’ மனப்பான்மையுடனும் கோமாளித்தனமாகவும் சூட்டிக்கொண்டு, இப் பிராமண வழக்கறிஞன் எழுதிவரும் கதைகளைப் போலத்தான் அன்றைய இராமாயண, மகாபாரதங்கள் எழுதப்பெற்றன. நல்லதம்பிக் ககதையில் வரும் இட்சுகாக், பர்ட்டன், நிக்சன் கீசிங்கர் முதலிய உண்மை மாந்தர்களையும், நல்லதம்பி, பிசாசு, உலக்கைக் கொழுந்து முதலிய உறுப்பினர்களையும் எதிர்கால மக்கள் படிக்க நேர்ந்தால், முன்னையவர்களின் வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்டு பின்னையவர்களும் வாழ்ந்துதான் இருக்க வேண்டும் என்று கருதிக் கொள்வார்களா இல்லையா? அப்படிக் கருதிக்