பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

39

இக் காட்டு மனிதர்களைத் துரத்தினர். துரத்தவே இவர்கள் மலைப் பக்கங்களில் ஓடி அங்கே அநேக காலம் வசித்து வந்தனர். இவர்களில் ஒரு சாதியார் நாகர்கள் எனப்படுவோர். இவர்களில் சிலர் நீலகிரியின் உச்சியில் இப்பொழுதும் வசிக்கின்றனர். இனி மேற்கூறிய புராதன இந்தியரைத் துரத்தியவர்கள் தமிழராவர். இவர்கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள். தங்கள் ஆடு மாடுகளுக்காகப் புல்லைத் தேடிக் கொண்டு ஊரூராய்த் திரிந்தவர்கள்”. (மேற்படி நூல் பக்கம் 21-23).

“வடமொழி தமிழ்மொழியோடு கலக்கப் புகுமுன்னரே முன்னது பேச்சு வழக்கற்று ஏட்டு வழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டு வழக்கு ஒன்றுமேயுள்ள பாஷையோடு இருவகை வழக்கமுள்ள பாஷையொன்று கூடியியங்கப் புகுமாயின் முன்னதன் (வடமொழி)ச் சொற்கள் பின்னதன்(தமிழின்)கண் சென்று சேருமே யன்றிப் பின்னதன்(தமிழின்) சொற்கள் முன்னதன் (வடமொழியின்) கண் சென்று சேரா. இதுவே வழக்காற்று முறை. இம்முறை பற்றியே வடசொற்கள் பல தமிழின்கண் புகுந்தன. தமிழ்ச் சொற்களில் சிலதாமும் வடமொழியின்கண் ஏறாமற் போயின. (மேற்படி நூல் பக். 35).

“தமிழ்மக்கள் ஆங்கிலரோடு நாடொறும் ஊடாடுபவராயினர். ஆங்கிலர் ஆள்வோரும் தமிழர் ஆளப்படுவோருமா யிருக்கின்றனர். (நூல் 1903-இல் எழுதப்பெற்றது). இவ்வாறு இருவரும் ஒத்தியங்கும் இடத்துத் தமிழ்ச்சொற்கள் ஆங்கில பாஷையிற் புகுதலும் ஆங்கிலச் சொற்கள் தமிழ்ப் பாஷையிற் புகுதலும் இயற்கையே! இதனைத்தடுக்க முடியாது தடுக்கப் புகுதலும் தக்கதன்றாம்; அவ்வாறு தடுக்கப் புகினும் அது வீண்முயற்சியாய் முடியுமே அன்றி வேறில்லை. பேச்சுத் தமிழில் அளவிறந்த ஆங்கிலச் சொற்களை மேற்கொண்டும், ஏட்டுத் தமிழ் அவற்றை ஏற்றுக் கொள்ளப் பின்னிடுகின்றது. எனினும் ‘சுதேசமித்திரன்’ போன்ற பத்திரிக்கைகள் ஆங்கிலச் சொற்கள் சிலவற்றைத் தமிழின்கண் ஏற்றப் புகுந்தன. மதுரைப் பழந்தமிழ்ச் சங்கத்தாரும் சிற்சில ஆங்கிலச் சொற்களை மேற்கோடல் இன்றியமை யாதெனக் கண்டனர்; காண்டலும் மேற்கொண்டனர். அவர் செயல் மிகவும் நேரிதே... இவ்வாறு மொழிபெயர்ப்பு வகையில் ஆங்கிலக் கருத்துகள் தமிழின்கண் எவ்வளவு புகினும் நலமே!...” மேற்படி நூல் பக். 136-137).

- எப்படி, தனித்தமிழ் இயக்கத்திற்கு வித்திட்டவராகக் கருதப்படுபவரின் உள்நோக்கம்? இந் நூலில் இவர் ஒரோவோர்