பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்

உரையாசிரியரின் உட்கோளை இவர் கண்டுகொண்டதாக எழுதும் பகுதியே அழுத்தமான சான்றாகும். அப்பகுதியில்,

“இவரது உரைநடை பெரும்பாலும் செந்தமிழ்ச் சொல் நிறைந்ததாக விருப்பினும் ஒரோவிடங்களில் சில தமிழ்ச் சொற்களுக்கு வட சொற்களைக் கொண்டு இவர் பொருளெழுதியுள்ளார். கடனென்பதற்குப் பிண்டோதக்கிரியை யென்றும், மருந்தென்பதற்கு பரிகாரம் என்றும், ஒளிருமென்பதற்குப் பாடஞ்செய்யும் என்றும் அறம் என்பதற்கு தர்மம் என்றும், பூண்டென்பதற்குத் தரித்ததென்றும், ஒம்புதல் என்பதற்குப் பரிகரித்தல் என்றும் கூறும் இடங்களையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் காண்க.”

- என்று எழுதியுள்ளார். புறநானூற்று உரையாசிரியர் கொண்டதாக இவர் குறிப்பிடும் அதே கொள்கையை இவரும் பின்பற்றியதற்குக் கரணியம். புறநானூற்று உரையாசிரியரையும் ஒர் ஆரியப் பார்ப்பனராகக் காட்டுதல் வேண்டும் என்பதோ, அவ்வாறு எழுதுவதுதான் சிறப்பு என்பதை உணர்த்தல் வேண்டும் என்பதோ வாகத்தான் இருக்க வேண்டும். மேலும் பண்டைப் புலவர்களிலோ, முற்றுாட்டுப் பெற்ற சிற்றரசர்களிலோ ஆரியர்கள் இருப்பாராயின் அவர்களை மிகவும். சிறந்தவர்களாகக் குறிப்பது இவரின் இனப் பற்றையும், ஓரம் போகிய தன்மையையும் நன்கு காட்டுகின்றது.

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்னும் சிற்றரசனை இவன் 'அந்தணத் திலகன்' என்றும் 'கௌண்டின்னிய கோத்திரத்திற் பிறந்தான்' என்றும் தேவையற்ற குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். பாடிய புலவர்கள் குறித்த ஏதேனும் ஒரு சிறுகுறிப்பைக் கொண்டே சிலரை இவரினத்தவராகக் கொண்டு மகிழும் சிற்றின்ப உணர்ச்சியும் இவர்க்கு இருந்திருக்கின்றது. கழகப் புலவர் எருக்காட்டுர்த் தாயங்கண்ணனாரை இவர் அந்தணரின் வேள்வித் தீயைப் பாராட்டிக் கூறியிருத்தலால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்னும் கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவரை ‘ஆத்திரையன் - அத்திரி குலத்தில் பிறந்தவர்; இவரது இப்பெயர் குடிப்பெயர்; இதனால் அவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரை ‘இவர் குலம் ஒருவகை வேதியர் குலமென்பது சிலர் கொள்கை’ என்றும் வேம்பாற்றூர்க் குமரனார் என்னும் புலவரைக் குறிப்பிடுங்கால், ‘வேம்பாற்றூர் என்பது மதுரைக்குக் கிழக்கே