பக்கம்:ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

றத்தாழ நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாவலந் தீவை நண்ணிய ஆரியக் கூட்டத்தார் தாம் நிலத்தேவர் (பூசுரர்) என்றும், தாம் பேசுவது தேவ மொழி (தேவ பாஷை) என்றும், கூசாது பொய் கூறித் தம் வெளிர் நிறத்தானும் வெடிப்பொலிப் பேச்சானும் திரவிட அரசர்களையும் மக்களையும் மயக்கித் தம் கொலை வேள்விகளுக்குத் துணை பெற்றனர். தம் சிறு தெய்வ வழுத்துரைகளை வேதங்களாகக் கட்டமைத்துக் கொண்டனர். படிப்படியே திரவிட இனத்தவரை முற்றும் அடிமையாக்கிக் தம் வாழ்வியல் நிலைகளை வளப்படுத்திக்கொண்டனர். அரசரையும் அடிப்படுத்தும் வல்லதிகாரம் பெற்றனர்.

தமிழ்மொழியிலும், தமிழர்தம் இலக்கியம், சமயம் முதலிய கலைத்துறைகளிலும், நாகரிகம் பண்பாடு ஆகிய வாழ்வியல் துறைகளிலும் ஆளுமை பெற்று மேம்பட்ட ஆரியப் பார்ப்பனர்கள் அவற்றையெல்லாம் மறைத்துத் திரித்துந் தம்மனவாக்கிக் கொள்ளும் பொருட்டுச் செய்த வகைவரிசைகள் பலப்பல. கெடுத் தொழித்தனவும் எண்ணில.

கோயில் வழிபாடு ஆரியர்க்குரிய தன்று. ஆனால் இன்று கோயில்களெல்லாம் ஆரியக் கூடாரங்களாகக் கருதப்படுகின்றன. தமிழ் வழிபாட்டு உரிமைக்குத் தடையாக நின்று வழிமறிப்பவர்கள் அவர்களே. பிராமணன் எவனுக்கும் சமற்கிருதம் தாய்மொழியன்று. ஆனால், ஒவ்வொருவனும் சமற்கிருதமே தன் தாய்மொழிபோல் கருதிக்கொண்டு, அதன் மேல் அளவு கடந்த பற்றுவைத்துக் கொண்டிருக்கின்றான்; அவ்வளவிற்குத் தமிழ் மொழி மேல் வெறுப்பும் கொண்டிருக்கின்றான். இஃதொன்றே ஆரியப் பார்ப்பனரின் மனப்பான்மையை வெளிப்படுத்தப் போதுமானதாகும்.

ஆரியத்தளையை அறுத்தெறிந்து விடுதலை பெறுவதே தமிழினம் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மேற்கொள்ள வேண்டிய தலையாய பணியாகும். ஆரிய அழிம்புகளை வரலாற்றடிப்படையில் நாம் எடுத்துக் கூறும்போது அதனை ஒப்புக் கொள்கின்ற நம்மவர்கள் சிலர், பிராமணர்கள் இப்போது திருந்திவிட்டனர் என்றும், முன்னை