பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாணிகம் கி.மு. 1000 - 500

103


இந்தியாவிலிருந்து வரும் கருங்காலி மரத்தின் நிலையான வாணிக நிகழ்வைக் குறிப்பிடுகிறது. கருங்காலி, பாரிகாஸா விலிருந்து (Barygaza) ஒம்மனா (Ommana) அப்லோகஸ் (Apologws) பகுதிகளுக்குக் கடலில் அனுப்பப்பட்டது எனக் கூறும் பெரிபுளுஸ் கூற்றை உறுதி செய்கிறது (Scor's Periplus. P.153), பிற்பட்ட காலத்து ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட வாணிகம், பழங்காலத்திலும் இருந்துள்ளது என வாதிடுவதில் உள்ள நியாயத்தின் வலுவை உறுதி செய்வதுமாம்.

இந்தியாவும் அஸ்ரியாவும்

கி.மு. 850 ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் ஷால் மெனெஸர் (Shalmenaser) அவர்களின் ஒற்றைக் கல்லாலான சதுரத் தூபியில், வாலில்லாக் குரங்குகள், இந்திய யானைகளின் உருவங்கள் உள்ளன. அஸிரியப் பேரரசன், மூன்றாம் திக்லத் பிலே சரின் (Tig|ats Pilesar) நிம்நட் (Nimwd) கல்வெட்டுக்கள், அஷரின் (Ashur) பேரறிவு கண்டு கொண்ட காரணத்தால் எங்கள் இறைவா கடல் நாட்டு அரசன், யாகினை (Yakin) மெரோடக் பலடன் (Merodach-baladan) எவ்வாறு வெற்றி கொண்டான் என்பதைக் கூறுகிறது. அவன், தன் நாட்டு அளவிறந்த பொன் தூள்கள், பொற்கலங்கள், பொன்னாலான கழுத்தணி, விலையுயர்ந்த ரத்தினக் கற்கள், கடல் படு பொருள் (முத்து) நீர் வளர்பிரம்பு ஒரு பால் வண்ணமும், ஒருபால் பிறிதொரு வண்ணமுமாக வண்ணம் ஊட்டப்பெற்ற ஆடைகள், எல்லாவகையிலுமான ' மணம்தரும் உணவுப் பொருள்கள் ஆகியவற்றைத் திறைப் பொருளாகக் கொண்டு வந்து கொடுத்து எவ்வாறு பணிந்து போனான் என்பதைக் கூறுகிறது. இங்கே எடுத்துக் கூறிய எல்லாமே, அந்நாளைய, இந்திய ஏற்றுமதிப் பொருள்களாம். பாரசீக வளைகுடாத் துறைமுகங்களைப் பர்ஷய நாட்டிற்குக் கிழக்கில் வெகு தொலைவில் சார்மணியம், இமயம் போலும் இடங்களாக ஆக்குவதையும் அவன் செய்தான். (Scoff's Periplus, Page:160)