பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை
———————————
ஆரியரின் தீ வழிபாட்டு நெறியின் தொடக்கத்திற்கு கி.மு. 3000ஐ நாம் அடைகிறோம். அந்தப் புதிர் ஈண்டு ஆராயத் தேவையில்லை. ஆனால் அவ்வேத காலம், ஒவ்வொன்றும் 500 ஆண்டுகளைக் கொண்டதான மூன்று யுகங்களை உள்ளடக்கியதாகவும் ஏறத்தாழ கி.மு. 3000ல் தொடங்கிய தாகவும். நான் கருதுகிறேன் எனக் கூறுகின்ற அறவோடு நிறைவு கொள்கிறேன்.

ஸ்ரீ இராமச்சந்திரன், வேதகாலத்தின் மூன்று பகுதிகளில், இரண்டாவது பகுதியின் இறுதியில் இருந்தார். ஆகவே அவருடைய காலம் கி.மு. 2000 எனக் கருதுகின்றேன். ஸ்ரீ இராமச்சந்திரன் பிறக்கும்போது ஐந்து விண்மீன்கள், மேலாட்சி நிலையில் இருந்தன என்ற செவிவழிச் செய்தியால் உறுதி செய்யப்படுகிறது என்ற சிறப்பும், இந்த நாளுக்கு உண்டு. ஸ்ரீ இராமருக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் இடையே கடந்துபோன காலம் 500 ஆண்டுகள் என்பது ஒரு நல்ல மதிப்பீடு. இம்மதிப்பீடு ஸ்ரீகிருஷ்ணனின் இறப்போடும், வேதமந்திரங்களை இயற்றி வந்த நீண்ட வழிமுறையினரின் மறைவுகளோடும் ஒன்றுபட்ட, கலியுகத்தின் மரபு வழித் தொடக்கமாம், வேதகால் முட்டி.வுக்கு நம்மைக் கொண்டுவந்து நிறுத்துகிறது.

பாரதப்போருக்குப் பின்னர், இந்தியாவின் ஆண்டுவழி நிகழ்ச்சி நிரல் பட்டியல், இன்றியமையா நிலையில் சரியான தல்லவாகலாம் என்றாலும், எளிமையானது. ஆனால், நாம் பெரிதும் கருத்தில் கொள்ள வேண்டுவது நிகழ்ச்சிகளின் வரிசைமுறையை ஆராய்ந்து காண முயல்வதே நம்பிக்கை யற்றதாகி விட்டதான நிகழச்சிகளின் சரியான நாட்களை அன்று.

தென்னிந்திய வரலாற்றுத் தேதிகளைப் பொறுத்த வரை இவைபோலும், தெளிவிலாக் கற்பனை முடிவுகளும், எட்டுவதற்கு அப்பாற்பட்டே உள்ளன. திருவாளர் கனகசபை அவர்கள் வரலாற்று மனிதர் சிலரின், ஏற்றுக் கொள்ளத்தக்க தேதிகளைக் கண்டுகொள்ளலாம் எனக் கற்பனை செய்துள்ளார். அது, வெறும் மாயை என்பது உறுதி செய்யப் பட்டுவிட்டது. எந்தக் காலத்திற்குப் பின்னர் நம்பத்தகுந்த,