பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

147



மரங்களே இல்லாமல் நீண்ட அப்பொட்டல் காட்டில், மான் கூட்டம் நீரென்று மயங்கி ; அது நோக்கி விரையும் கொடுமை மிக்க, மண்ணால் செய்து சுடப்பட்ட தயிர்த் தாழியில், மத்திட்டுக் கலக்கிய காலத்து, வெப்பத்தால் கைகூடாது சிதறிக்கிடக்கும் வெண்ணெய் போல, உப்புப் பூத்துக் கிடக்கும் களர் நிலத்தில் ஓமை மரங்கள் மட்டுமே நெருங்க , வளர்ந்து கிடக்கும் காட்டில், வெயில் நிலைபெற்று நிற்பதால் வெம்மை மிக்க பாலை நிலத்தில் தனியாகச் சென்று கொண்டிருப்பார் என அண்மையில் உள்ள அயலார் கூறு கின்றனர். நான் இக்கொடுமையை எங்ஙனம் ஆற்றுவேன்?"

"கண்ணும், தோளும், தண்ணறும் கதுப்பும்
திதலை அல்குலும் பலபா ராட்டி,
நெருநலும் இவணர் மன்னே; இன்றே,
பெருநீர் ஒப்பின் பேஎய் வெண்தேர்
மரன் இல் நீளிடை மான்நசை யுறூஉம்
சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற
பிறவா வெண்ணெய் உருப்பிடத் தன்ன
உவர் எழுகௗரி ஓமையம் காட்டு
வெயில் வீற்றிருந்த வெம்மலை அருஞ்சுரம்
ஏகுவர் என்ப தாமே; தம்வயின்
இரந்தோர் மற்றால் அற்று
இல்லின் வாழ்க்கை வல்லா தோரே"
                - நற்றிணை : 84.

காதல் திருமணம் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமுதாய முறைதான் என்றாலும் தன் மகள், தங்களை மறந்து, அவள் விரும்பும் காதலனோடு அவனூர் சென்றுவிடுவதால் ஏற்படும் மனக்கலக்கத்தை எந்தத் தாயும் தாங்கிக்கொள்ள மாட்டாள், தன் அவள் விரும்பும் காதலனை அவளே தெரிந்துகொண்டு மகிழ்வதை அவள் தாய் மறுப்பதில்லை என்றாலும், அண்டை அயலார், அது குறித்துக் கூறும் வம்பு உரைகள் கேட்ட வழிப் பெரிதும் வருந்துவாள். அவ்வகையில் வந்தது இப்புலம்பல். கரிய எருமைக்கு உண்மையில் பிறந்த பெரிய காதுகளை உடைய கன்று, புதுமலர்கள் உதிர்த்த தாதுக்கள் |